வவுனியா வர்த்தக சங்க ஒழுங்கமைப்பில் கொஸ்லாந்த உறவுகளுக்கு நிவாரண உதவிகள்- (படங்கள் இணைப்பு)
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நேற்று (22.11.2014) சனிக்கிழமை வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.எஸ்.இராசலிங்கம் தலைமையிலான குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது. முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எஸ்.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வர்த்தக சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் வாடி வீடு அதிபர் கதிர்காமராஜா(பூஸ்), புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு. சிவராசா இராசசிங்கம் (ராஜன்), கோவில்குளம் இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், கழக உறுப்பினர் திரு ந.தினேஷ் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர். Read more
நுவரெலியா தலவாக்கலை டயகம பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்காக வவுனியா வர்த்தக சங்கத்தினால் சேகரித்து வழங்கப்பட்ட உடுபுடவைகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு தலா 1500 ரூபாய் வீதம் 22 குடும்பங்களுக்கும் 33,000 ஆயிரம் ரூபாய் நிதியும் அந்த மக்களுக்கு உதவும் வகையில் நேற்றையதினம் (22.11.2014) புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் தலவாக்கலை சிறீ கதிரேசன் ஆலய மண்டபத்தில் வைத்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திரு. பிரசாத் மற்றும் திரு. பாலமுரளி, திரு. திலகேஸ்வரன், திரு. விஜயகுமார், திரு. கெங்காதரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளராக இருந்த நண்பர் திரு. சண்முகம் சிவகுமார் அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (23.11.2014) காலமானார். நண்பர் சிவகுமார் அவர்கள் எனது தந்தையின் காலம் தொடக்கமே அரசியலில் மிகத் தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியிலும் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காகவும் நன்றாக உழைத்தவர். இவர் எனது தந்தையுடன் தனிப்பட்ட நட்புடன் பழகி வந்தவர்; என்பதுடன், என்னுடனும் மிக நீண்ட காலமாக நட்பாகப் பழகியிருக்கின்றார். அவருக்கு
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கொஸ்லாந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேற்று நேரடியாக கையளிக்கச் சென்றிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட்
கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்திருந்தனர். மாவனல்லை பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததினாலேயே இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. இவ் விபத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பஸ் வண்டி வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கையிலேயே இவ் விபத்து இடம்பெற்றிருந்தது.