Header image alt text

யாழ் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-

yaal pandatharippu (2)யாழ் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (04.11.2014) செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணக்கல்விப் பணிப்பாளர் திரு ,ராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பழைய மாணவியும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் பழைய மாணவியும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று எனது பாடசாலைப் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இப் பாடசாலையில் மாணவியாக இருந்த காலத்தினை எண்ணிப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. என்னை கற்பித்து இன்றைய இந்த நிலைக்கு உய்த்துவதற்கு அத்திபாரமாக அமைந்த இப் பாடசாலை எந்த ஒரு சந்தர்ப்த்திலும் மறந்துவிட முடியாத ஒன்றாகும். எம்மை இந்த உலகிற்கு அர்பணித்தவள் தாய் அவ்வாறே எம்மை இந்த உலகில் சிறகடித்து பறப்பதற்கு வழிவகுப்பவள் இந்த பாசாலைத் தாய். இந்த வகையில் இங்குள்ள ஒவ்வொரு மாணவிகளுக்கும் இப் பாடசாலை தாயாகவே உள்ளது. இன்று இந்த இலங்கைத் தீவில் ஆண்களுக்கு சமமான வகையில் பெண்கள் எண்ணிக்கையில் சரி, கல்வியில் சரி, அரச பதவிகளில் சரி, உயர் நிலைகளில் சரி, அரசியலில் சரி சகல துறைகளிலும் உயர் நிலை பெற்றுள்ளமையை Read more

தேர்தலில் போட்டியிட தடையுள்ளதா? என ஜனாதிபதி உயர் நீதிமன்றிடம் கேள்வி-

images18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, மேலும் ஒரு தவணை பதவிக் காலத்திற்காக தேர்தலில் போட்டியிட தடை உள்ளதா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்று இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ள விடயம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் எழுத்துமூல விளக்கத்தை சமர்ப்பிப்பதற்கு இம்மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 03 மணி வரை காலஅவகாசம் உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய, உயர் நீதிமன்ற பதிவாளரால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் நிறைவு-

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சுதந்திர ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 10,000 ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி, சேவை கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கம் இன்றுகாலை 9 மணியளவில் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தது. வேலை நிறுத்தத்தினைத் தொடர்ந்து விமான சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததுடன் மின்சாரமும் தடைபட்டிருந்தது. சுதந்திர ஊழியர் சங்கமானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தொழிற்சங்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா, வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த பொன்சேகாவின் கடவுச்சீட்டு, 100,000 ரூபாய் பிணை முறியின் அடிப்படையில் அவரிடம் ஒப்படைப்பதற்கு கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் தேவிகா தென்னகோன் உத்தரவிட்டார். பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, சரத் பொன்சேகா சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற அனுமதி வேண்டுமென்றும் அவரது சட்டத்தரணியினால் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர், சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கியதோடு அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதிவரை, சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்கு சரத் பொன்சேகாவுக்கு அனுமதி கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15,700 வீடுகள் நிர்மாணம்-

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் இதுவரை 15,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. 19,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, வட பகுதிக்கான ரயில் மார்க்கத்தை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும் என யாழ். இந்திய துணை தூதுவர் எஸ். தட்சணாமூர்த்தி கூறியுள்ளார்.

ராமர் பாலத்துக்கு ஆபத்தில்லை – நிதின் கட்காரி-

சேது சமுத்திரதிட்டத்தினால் ராமர் பாலத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என இந்திய போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர திட்டத்தினால் இந்துக்களினால் நம்பப்படும் ராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும் அமைச்சர் நிதின் கட்காரி இதனை நிராகரித்துள்ளதுடன், சுற்றாடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்த திட்டம் அமுலாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வடக்கு கமக்கார, கால்நடை அமைப்புகளின பிரதிநிதிகளின் சந்திப்பு-

vavuniya vadakku kamakkaara (6)வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அழைப்பையேற்று வவுனியா வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் நேற்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ.ஜங்கரநேசன் அவர்களுடன் வவுனியா வடக்கு கமக்கார, கால்நடை அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ ம.தியாகராசா, பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில்  வவுனியா வடக்குப் பிரதேசத்தில் காணப்படும் விவசாயக் குளங்களின் புனரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் கமக்கார அமைப்புப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது தொடர்ந்து கால்நடை, பழச்செய்கை, ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா வடக்குப் பிரதேசத்தில் அவசியமாகத் திருத்தப்படவேண்டிய குளங்கள் தொடர்பாகவும், சிறு குளங்களை இணைத்து பாரிய அளவிலான ஒர் நீர்பாசனத திட்டத்தை இப்பிரதேசத்தில் அமைக்கப்படவேண்டும் எனவும் திட்ட முன்மொழிவொன்றை இப்பிரதேச மக்கள் சார்பில் வடக்கு மாகாணசபை அமைச்சர் கௌரவ பொ.ஜங்கரநேசன் அவர்களிடம் முன்வைத்தார்.

vavuniya vadakku kamakkaara (1)vavuniya vadakku kamakkaara (7)vavuniya vadakku kamakkaara (8)vavuniya vadakku kamakkaara (6)vavuniya vadakku kamakkaara (2)vavuniya vadakku kamakkaara (4)

 

வவுனியா ஜினியஸ் பாலர் பாடசாலையில் கண்காட்சி-

வவுனியா பண்டாரிகுளம் ஜினியஸ் பாலர் பாடசாலையில் கண்காட்சி நிகழ்வு நேற்று 03.11.2014 திங்கட்கிழமை மேற்படி பாலர் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் அதிதிகளாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

vavuniya ginisam paadasaalai (5)vavuniya ginisam paadasaalai (13)vavuniya ginisam paadasaalai (1)vavuniya ginisam paadasaalai (6)vavuniya ginisam paadasaalai (4)vavuniya ginisam paadasaalai (3)vavuniya ginisam paadasaalai (2)vavuniya ginisam paadasaalai (9)vavuniya ginisam paadasaalai (8)

உலக வர்த்தக மைய கோபுரம் மீண்டும் திறப்பு-

2imagesCAVTMIWPulaga varthaka maiyam001ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான நிவ்யோர்க் உலக வர்த்தக மையத்தின் பிரதான கோபுரங்கள் 13வருடங்களின் பின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளியீட்டு பகுதியின் பணியாளர்கள் முதலாவது கோபுரத்திலுள்ள 104ஆவது மாடியிலுள்ள தமது அலுவலகங்களுக்கு திரும்பியுள்ளதுடன் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள்திருத்தப்பட்ட வானளாவிய கட்டிடங்கள் தற்போது அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடங்களாக கருதப்படுகின்றன. அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் 60 சதவீத பகுதி அமெரிக்க அரசின் பொது சேவைகளுக்கான நிர்வாக செயற்பாடுகளுக்காக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. 541மீட்டர் உயரம் கோபுரத்தில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுகூடம் மற்றும் அரும்பொருட்காட்சியகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஓமந்தைப் பகுதி மாணவனை காணவில்லையென முறைப்பாடு-

Omanthai paguthiவவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜே.ஜெயகெனடி தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை சூரன்போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் என்ற 16வயது மாணவன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் ஜெயசித்திரா நேற்று தம்மிடம் முறைப்பாடு செய்தபோது தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை சூரன்போருக்காக வவுனியா நகருக்கு சென்ற எனது மகன் வியாழக்கிழமை வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நின்றதை பலர் கண்டுள்ளனர். அன்று இரவு 8 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளான். ஆனால் இன்று வரை வீடு வந்து சேரவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ளான் என தாயார் கூறியுள்ளார்.

தண்ணீர் பெருக்கெடுப்பினால் மீட்பு பணிகள் இடைநிறுத்தம்-

koslanda_image_005கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலவும் மோசமான காலநிலையுடன் பேருகலை மலையிலிருந்து இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்தமையால் மீட்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலி பெருக்கி மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று ஏழாவது நாளாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரத்துக்குள் அங்கு மோசமான காலநிலை நிலவியது. இதனையடுத்தே மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கு மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

அடிப்படைத் தேவைகளுக்காக காத்திருக்கும் கொஸ்லாந்தை மக்கள்-

meetiyapeththa man sarivu (1)பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உணவு சார்ந்த தேவைகளை அரசாங்கமும், நிறுவனங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களும் நியாயமான அளவிற்கு பூர்த்திசெய்து வருகின்றனர். இருந்தபோதிலும் தற்போது அங்கு அடிப்படையான மற்றும் அவசியமான தேவையாக உள்ள குளிர் பிரதேசத்திற்கு உகந்த படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள், குளிர்கால உடைகள், நில விரிப்புகள் மற்றும் உடுபுடவைகள், தான் மிகமிகக் குறைவாக உள்ளது. அதாவது உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவும் அரிதாகவுமே இவை கிடைக்கின்றன. எனவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களையும் போதியளவில் வழங்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களும், அவர்கள் சார்ந்த சமூக அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்களின் விபரங்கள்-

kkoslantha_bodyபதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவில் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டுக்கு வந்த 23 வயதுடைய யுவதியும் அவரது கணவரும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் என நம்பப்படுபவர்களது விபரம் வருமாறு,

1. சந்திரவதனி
2. தேவிகா
3. லக்சான்
4. லுக்சிதா
5. சுஜன்
6. பாலசுப்ரமணியம்
7. பவானி
8. ரஞ்ஜிதம்
9. இராஜகௌரியும் அவரது கணவரும் (தலைத்தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு வந்தவர்கள் )
10. ராமன்
11. திலகலட்சுமியும் அவரது கண­வரும்
12. விதுசிகா
13. முத்து
14. செல்வநாயகி
15. தங்கவேல்
16. குடும்பநலத் தாதியும் அவரது மகனும் மகளும் மகனின் மனைவியும்
17. ருத்திரன்
18. மின்னல் என்றழைக்கப்படுபவர்
19. மாரியப்பன்
20. மாரியாயி
21. மேசன் வேலை செய்பவரும் அவரது மனைவியும்
22. தெய்வானை
23. பிரகாஷ்
24. லீலாவதி
25. மாரியாயி
26. ஆர்னோல்

மூளாய் கலைவாணி சனசமூக நிலையத்தில் சிறுவர் தின, ஆசிரியர் தின நிகழ்வுகள்-

moolaiயாழ். மூளாய் கலைவாணி சனசமூக நிலையத்தில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுமாலை 3மணியளவில் கலைவாணி கோல்ட் ஸ்டார் சிறுவர் கழகத்தினதும் முன்பள்ளியினதும் சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கோல்ட் ஸ்டார் சிறுவர் கழகத் தலைவர் செல்வன் தங்கராஜா நிலக்சன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வன யோசுவா அடிகளார் அவர்களும், கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது வடமாகாண சபை ஒதுக்கீட்டின் கீழ் மேற்படி சனசமூக நிலையத்தில் நடைபெற்று வரும் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக் கருவிகளை வழங்கியிருந்தார். இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது இன்றைய இச் சிறார்களின் கைகளில் தான் நாளைய எமது சந்ததியினரின் எதிர்காலம தங்கியுள்ளது. இச் சிறார்களை உரிய முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய நிலை எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும். இப் பகுதியில் உள்ள சிறார்கள் புலமைப்பரீட்சையில் உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களை மனதார பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன் இவர்கள் எதிர்காலத்தில் உயர் நிலை அடைய வாழ்த்துகின்றேன். இதே வேளை மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் வகிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டதோடு எதிர்காலத்திலும் இவ் மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பில் என்னால் ,இயன்ற உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதனைத் தொடாந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன.

moolai... moolai..0 moolai moolai01 moolai03 moolai04

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் பெரியபுலோ மக்களுடன் சந்திப்பு-

periyapuloயாழ். சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் கடந்த 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் பிரதேச பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. திரு.குமார்(சின்னக்குமார்) அவர்களின் தலைமையில் பெரியபுலோ அண்ணா சனசமூக முன்றலில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் அப்பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாhர்வையிட்டுள்ளார்.

வட்டுக்கேட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-

kalvikku kaikoduppom02 kalvikku kaikoduppom03யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்சித்திட்டத்தின் கீழ் ஜேர்மனி வாழ் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டுப் பணிப்பாளர் திரு.பி.எல்.மோகணக்குமார் ஆசிரியர் தலைமை வகித்திருந்தார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கினார்கள்.

வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு-

koththanthurai mayaanam01koththanthurai mayaanam யாழ். வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், மற்றும் புளொட் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோர் 30.10.2014 அன்று வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளனர். மேற்படி மயானமானது வட்டுக்கோட்டை, அராலி, சங்கரத்தை, பொண்ணாலை, மூளாய் மற்றும் சித்தங்கேணி பகுதி மக்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை இவ் மயானம் மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்தமையும் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகும். இவ் நிலைமைககள் தொடர்பில் வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத் தந்ததனைத் தொடர்ந்து கௌரவ வடமாகாண சபை முதலமைச்சர் அவர்கள் தமது ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 7 லட்சமும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா. ஓரு லட்சமும் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அவர்களது மாகாணசபை நிதியிலிருந்து ரூபா 50,000மும் ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் வெகு விரைவில் இதன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.

அராலி கிழக்கு ஐயனார் கோவில் புனரமைப்பு குறித்து மாகாணசபை உறுப்பினர் ஆராய்வு-

arali east04யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி கிழக்கு பகுதிக்கு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று விஜயம் மேற்கொண்ட புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அராலி கிழக்கு ஐயனார் கோவிலுக்கு சென்று நடைபெற்றுவரும் புனருத்தான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. சு.ஐயலிங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

arali eastarali east05arali east06arali east01

மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்-

anartha pathipputhaviவட மாகாண சபை அனர்த்;தப் பாதிப்புக்கு உதவுமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பதுளை கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 1500 பாதிக்கப்பட் மக்களுக்கான உடுபுடவைகள் வழங்கும் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர்களான திரு ந.பி.,ராஜ்குமார், திரு. ச.சபாநாயகம் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர், இவ் நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பொருட்டு மாவட்ட இளைஞர் கழகத்தின் சம்மேளன உப தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. ச.லக்சன் அவர்களிடம் உடுபுடவைகளை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் ஒப்படைத்தார். மேற்படி உடுபுடவைகள் நாளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொஸ்லாந்தை மண் சரிவு அவலத்திற்கான இரங்கல் கூட்டம்-

koslanda irankal koottam (1) koslanda irankal koottam (2) koslanda irankal koottam (5)கொஸ்லாந்தை, மீரியபெத்த மண் சரிவு அவலத்திற்கான இரங்கல் கூட்டம் நேற்று 02.11.2004 ஞாயிற்றுக்கிழமை மாலை மருதானை பூக்கர் மண்டபத்தில் மக்களுக்கான கலைஞர் அமைப்பின் சார்பில் கலைஞர் மொஹமெட் இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் புரவலர் கௌஷல்யா அம்மையார், கௌரவ ஏ.எச்.எம் அஸ்வர் பா உ, பேராசிரியர் சந்திரசேகரன், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனீஸ், பிரதி அமைச்சர் பிரபா கணேசன், பிரதி அமைச்சரின் செயலாளர் எச்.எச். விக்ரமசிங்க்ஹா, முஸ்லீம் பேரவை தலைவர் ஏ.என்.எம் அமீன், ஜ.தே.மு தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் ஆகியோர், ஆத்ம ஷாந்திக்கு மெழுகுவர்த்தி ஏற்றியதுடன், இரங்கல் உரையாற்றினர்.

கொழும்பு மெரைன் ட்ரைவ் வீதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்-

puttalam colombo roadகொழும்பு மரைன் ட்ரைவ் வீதியில் இன்றுமுதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த விதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அலுவலக நாட்களில் காலை 7மணி தொடக்கம் 9 மணி வரை மரைன் ட்ரைவ் வீதியின் வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்தியிலிருந்து கின்றோஸ் பிளேஸ் சந்திவரை கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களை மாத்திரமே செலுத்த முடியும். பிற்பகல் 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை பம்பலப்பிட்டி கின்றோஸ் பிளேஸ் சந்தியிலிருந்து வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்திவரை தெஹிவளை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவிள்ளது. இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீறியபெத்தை மீட்பு பணியில் இன்று இரு சடலங்கள் மீட்பு-

kkoslantha_bodyபதுளை மாவட்டம் கொஸ்லாந்தை, மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும், சேறு கலந்திருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்படி மண்ணுக்குள் புதையுண்ட 7பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தப்பட மாட்டாதென பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் சிக்கல்-

எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை, பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் இடாப்பு இன்று முதல் மக்கள் பார்வைக்கு-

தேர்தல்கள் ஆணையாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் காட்சிபடுத்தப்படவுள்ளது. இதற்கமைய, இந்த வாக்காளர் இடாப்பை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பார்வையிட முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பதற்கான தகைமை 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மாத்திரமே உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க……… Read more

தற்கொலைத் தாக்குதலில் 55 பேர் மரணம் – பாகிஸ்தானில்

PakistanWagahBBczjQ8பாகிஸ்தானில் வாகா எல்லையில் நேற்று நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 55பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள வாகா எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக வந்த Read more