Header image alt text

இந்தியா – சீனா – இலங்கை

Posted by plotenewseditor on 3 November 2014
Posted in செய்திகள் 

இந்தியா – சீனா – இலங்கை

untitledஇந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலபிரதேச பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதுவரை தரைவழியாக நடந்து வந்த ஊடுருவல் சம்பவங்கள் தற்போது நீர் வழியாகவும் நடக்க தொடங்கியுள்ளது. அதன்படி எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரி வழியாக சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் லடாக் அருகே இமயமலை பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், 45 கி.மீ. பகுதி இந்தியாவிலும், மீதமுள்ள 90 கி.மீ. பகுதி திபெத், சீன பகுதிகளிலும் உள்ளது. இந்த ஏரி வழியாக கடந்த மாதம் 22-ந் தேதி சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் திடீரென ஊடுருவியது. உடனே இதை கண்டுபிடித்த இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு வீரர்கள், Read more

இயற்கையின் கோர தாண்டவத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிடுவோம்..!!

malayakam1பதுளையில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற இயற்கையின் கோர தாண்டவத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிடுவோம். இன்று மண்சரிவால் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள எமது உறவுகளான தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழர்களினதும் தலையாய கடமையாகும். உலகெங்கும் பரந்து வாழும் எம் மக்கள் மலையகத்தில் நிர்க்கதிக்கு உள்ளான உறவுகளுக்கு உதவ விரும்பி நேரடியாக உதவ முடியாது போனால், உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது உதவிகளை அந்த மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான உதவிகளை நாம் செய்து தருவோம். உறவுகள், உடமைகளை இழந்து தவிக்கும் எமது தமிழ் மக்களுக்கு உடனடியாக உதவ வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். “அதிரடி” இணையத்தளம், மற்றும் பிரித்தானியாவின் “வெற்றி” வானொலி, “பூர்வீகம்” செய்திகள் ஆகியவற்றின் ஆதரவுடன் “வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினரால்” எமது உறவுகளுக்கான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. நல்லுள்ளம் படைத்த எமது உறவுகள் உதவிட கழகத்தினருடன் தொடர்பு கொள்ளவும். நேரடியாக பொருட்களை எமது அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். எமது அலுவலக முகவரி… 

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்  இலக்கம் 56, 5ஆம் ஒழுங்கை,
கோவில்குளம், வவுனியா.

மேலதிக தகவல்களுக்கு-
“வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினருடன்” தொடர்பு கொள்ள முடியும்….
0757729544 (திரு.காண்டீபன்) 0766644059 (திரு.நிவேதன்)

காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு-

kaanaamat ponor thodarpilகாணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் இன்று மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இன்று முதல் 5ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி இன்று மற்றும் நாளை கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளன. மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நவம்பர் 4 மற்றும் 5ம் திகதிகளில் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது.

பிரித்தானியாவில் 3000 இலங்கையர்கள் தலைமறைவு-

brithaniyavil 3000 ilankaiyarkalபிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3000 இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் சுமார் 50 ஆயிரம் வெளிநாட்ட பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளபோதிலும், அவர்கள் கைதுகள் மற்றும் நாடுகடத்தல்களில் இருந்து தப்பியுள்ளனர். கல்வி மற்றும் சுற்றுலா வீசாக்களில் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்து, வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் அங்கு இவ்வாறான எண்ணிக்கையானர்கள் தலைமறைவாக வாழ்கின்றனர். அவர்களில் 3000 இலங்கையர்கள் இருப்பதாக கூறப்படுகிறபோதும், உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை. அவர்களை தேடி கைதுசெய்து இலங்கைக்கே நாடுகடத்த முயற்சிக்கிறபோதும், அவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இல்லாததால் இதனை மேற்கொள்ள முடியாதிருக்கிறது என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு-

tamil  muslimதமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், எதிர்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்படும் என மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனும் இச்சந்திப்பு இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளார். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்-

varavu selavu thitta 2m vaasippu2015ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 157 வாக்குகள் ஆதரவாகவும், 57 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜாதிக ஹெல உறுமய வாக்களிப்பில் பங்குகொள்ளாதிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க……………. Read more

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு-

neerveli school  (1)யாழ்ப்பாணம் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு நேற்று முன்தினம் (30.10.2014) ஞாயிற்றுக்கிழமை ஒருதொகுதி புத்தங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட் தலைவரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி ஒரு தொகுதி புத்தகங்களை இந்நிகழ்வின்போது பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரிய, ஆசிரியர்களும் பெருமளவில் பாடசாலைப் பிள்ளைகளும் கலந்து கொண்டிருந்தனர்.

neerveli school  (2)neerveli school  (1)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நிதியுதவி-


imagesயாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மகப்பேற்று விடுதியை கட்டுவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். வைத்தியசாலையின் விடுதி மிகவும் பழைமை வாய்ந்ததனால், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், 2015ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 300 மில்லியன் ரூபா நிதி சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு விடுதிக்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது என பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்-

ramanadapuram thankachchi madathilஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறைஆயர் யேசுராஜா தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மீனவர்களின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈ டுபட்டுள்ளனர். முன்னதாக, இராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 5 மீனவர்களின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தமும், அதற்கு முன் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதடும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு இலங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் தண்டனையை நிறுத்திவைக்க அழுத்தம் கொடுக்கத் தவறினால் நவம்பர் 7ம் திகதி அனைத்து விசைப்படகு மீனவர் பிரநிதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்படும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் – 63 பேர் வெளியேற்றம்-

train_lanka_கண்டி – புபுரஸ்ஸ – ஸ்டெலன்பர்க் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இவ்வாறு ஸ்டெலன்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான வசதிகள் தொலுவ பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் 40 எச்.ஐ.வி. தொற்றாளர்கள்- ஹரிஸன் எம்.பி-

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 40 இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இதன்போது ஹரிஸனின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, ‘எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 772பேர் மட்டுமே இலங்கையில் உள்ளனர்’ என்று கூறியுள்ளார். உலகின் 33 நாடுகள், இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆயினும், இலங்கையில் இவ்வகை நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். இலங்கையில், 196 நோயாளர்கள் கடந்த வருடம் இனங்காணப்பட்டனர். இவ்வருடம் ஒக்டோபரவரை 169 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நோயை சுகப்படுத்த முடியாது. எனினும், எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு கூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படுகின்றது என பிரதி சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

பாதுகாப்பற்ற கிணற்றினுள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு-


paathukaapatra kinatril vilunthuஅம்பாறை – சம்மாந்துறை – சொறிக்கல்முனையில் 4 வயது சிறுவன் ஒருவன் நிலத்தடி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை ரவி அனுசாந்த் என்ற சிறுவனே சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த இவர், பாதுகாப்பற்ற கிணற்றினுள் கிடப்பதைக் கண்ட அயலவர்கள் உடனடியாக மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை-


மட்டக்ளப்பு, ஏறாவூர் – மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 13வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறுகின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் – கொழும்பு வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம்-


puttalam colombo roadபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விஷேட வாகனப் போக்குவரத்து திட்டம் ஒன்றை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்றுகாலை 10 மணிமுதல் மாலை 4 வரையான காலப்பகுதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் – கொழும்பு பிரதான வீதிக்கு ஊடாக அமைக்கப்பட்டுள்ள மானவேரிய ரயில்பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர.


மாலக்க சில்வா மீது தாக்குதல்-


maalakka silva meethuஅமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, மூவர் காயம்-


திருகோணமலையில் கட்டடமொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பழைய கட்டடமொன்றை அகற்றுவதற்கு முயற்சித்த சிலர்மீதே நேற்றிரவு சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.