தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் சேமமடு பாடசாலை மைதானம் புனரமைப்பு-

ilaignar kalaham  (1)தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மைதானம் நேற்று (02.03.2015) திங்கட்கிழமை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் திரு.எஸ்.சசிகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் நிதியுதவியுடன் இப் பாடசாலையின் மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் சார்பாக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், வித்தியாலய அதிபர் திரு. எஸ்.சசிகுமார், பாடசாலை ஆசிரியர் திரு. டி.உமாசுதன், தமிழ் தேசிய இளைஞர் கழக ஆலோசகர் திரு. முத்தையா கண்ணதாசன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு. த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு. சஞ்சீவன் மற்றும் சேமமடு கிராம முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இவ் பாடசாலை மாணவர்களினதும், பாடசாலை பௌதீக வளங்களின் அபிவிருத்திக்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தங்களாலான உதவிகளை நேரடியாகவோ அல்லது கழகம் ஊடாகவோ உதவ முன்வரவேண்டும் என தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilaignar kalaham  (2) ilaignar kalaham  (3) ilaignar kalaham  (4) ilaignar kalaham  (6)