Header image alt text

லிழிநீர் அஞ்சலிகள்

Posted by plotenewseditor on 22 April 2015
Posted in செய்திகள் 

லிழிநீர் அஞ்சலிகள்  – அமரர் மனுவேல்பிள்ளை அன்னமலர் அவர்கள்

webயாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை அன்னமலர் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை (அதிபர்) அருள்மேரி தம்பதிகளின் மகளும், மேரிசறோஜா, அருளானந்தம், மரியநாயகம், சேவியர் தனிநாயகம், அன்னபாக்கியம், அன்ரன் திருச்செல்வம் ஆகியோரின் சகோதரியும்,

கணபதிப்பிள்ளை ரஞ்சிதமலர் சத்தியசோதி வசந்தி ஆகியோரின் மைத்துனியும், சுதர்சினி ஜெகதீபன் நவதீபன் ஜனாதீபன் துஷ்யந்தினி ஆகியோரின் சித்தியும், கிரிசாந்தினி, நிசாந்தன், துஷ்யந்தன், யூட் நிறோஜன், அருணன், வில்சன், ரமணன் ஆகியோரின் அத்தையும், ரிஷிகாந், கௌசிகாந் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

விழிநீர் அஞ்சலிகள்

Posted by plotenewseditor on 22 April 2015
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலிகள்

2015-04-22 12.55.32யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முகத்தான்குளம், செட்டிகுளம், வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சின்னப்பிள்ளை அவர்கள் 22.04.2015 புதன்கிழமை அதிகாலை 5மணியளவில் அன்னாரின் முகத்தான்குளம் இல்லத்தில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

உயர் சிந்தனை கொண்ட
உத்தம தோழன் ரத்தினவேல்,
தன்னினத்தின் மானம் காக்க
தன்னையே அழித்த (மதியெனும்)
தனையனைத் தந்த எம் தாயே1
சின்னப்பிள்ளை அம்மாவிற்கு…
தீராத் துயரோடு
செலுத்துகின்றோம் அஞ்சலியை….

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம். 

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 1.00 மணியளவில் செட்டிகுளம் இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.      தொடர்புகட்கு: 0245682516 0776149952

பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்

basilதிவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார். கடுவளை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் அமைச்சர் இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகைதந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற சில கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக பொலிஸார் கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயன்ற இந்தியர் கைது-

arrest (30)சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த இந்தியர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது பயணப் பையில் மறைத்துவைத்து, வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். அவரிடம் 15,500 அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளது. அவற்றின் பெறுமதி 20 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமாகும். நாட்டிலிருந்து பாங்கொக் செல்ல முயற்சித்தபோது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த இலங்கையரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 23,750அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் பெறுமதி 31 இலட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாவாகும். சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 25 வயதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கப்பிரிவு கூறியுள்ளது.

சென்.பீற்றர்ஸ் கல்லூரி ஊழியர் கொலை தொடர்பில் இருவர் கைது-

killedகொழும்பு, பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பாடசாலையின் காவலாளியும் கொலைசெய்யப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற நபருமே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றும் 44 வயதுடைய சூட்டி என்கிற கிருலப்பனையைச் சேர்ந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் களஞ்சிய அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளை பிரேத அறிக்கையில் உயிரிழந்தமைக்கான காரணம் தெரிவிக்கப்படாமையால் குறித்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு-

dead.bodyமுல்லைத்தீவு நந்திக் கடலில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நந்திக்கடலுக்கு நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற ஒருவரே நேற்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முள்ளியவளை கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த 36வயதான ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக பூகோள தினம் இன்றாகும்-

Hபூகோள தினம் (ஏர்த் டே) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். சூழலை பாதுகாப்பதற்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் உலக பூகோள தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சூழல் மாசடைவதை தவிர்ப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே பூகோள தினம் அனுஷ்டிப்படுவதன் முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் பேராசிரியர் லால் தர்மஸ்ரீ கூறுகிறார். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை கூறியுள்ளது.

லலித் வீரதுங்கவிடம் விசாரணை-

lalithமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்கமீது நிதி மோசடி குற்றச்சாட்டில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புன்னைக்குடாவில் ஆணின் சடலம் மீட்பு-

deadமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா கடலோரத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸாருக்கு இன்றுகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் பொலிஸார் கேட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உப-பரிசோதகர் கொலை தொடர்பில் மனைவி கைது-

arrestபண்டாரகம பொலிஸ் உப-பரிசோதகர் ஆர்.டப்ளியு பளிஹவதன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவருடைய மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் உப-பொலிஸ் பரிசோதகர் கடந்த 7ஆம் திகதி, கழுத்து வெட்டபட்டு கொலை செய்யப்பட்டார். அவர், 10 இலட்சம் ரூபாய் குத்தகை அடிப்படையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இக் கொலை தொடர்பில் அவரது மனைவி மற்றும் பாணந்துறை கோழிக்கடை உரிமையாளர், தெஹிவளையை சேர்ந்தவர் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்-

MEERIYABETTHA (3)பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொஸ்லாந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரியபெத்த அம்பிட்டிகந்த பிரதேசத்திலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த அடைமழைக்காரணமாக கடந்த 20ம் திகதி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 28பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவு எச்சரிக்கையை குறைப்பதற்காக தியத்தலாவ, இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் மழைநீர் முறையை வடிந்தோடும் வகையில் நடவடிக்கையை எடுத்துவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

mahinda maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு மே 1ம் திகதிக்கு முன்னர் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சில விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திபானது பொதுவான ஓர் இடத்தில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோட்லோஜ் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்-
 கிரியாரம்பம் 22.04.2015, எண்ணெய்க்காப்பு 23.04.2015, கும்பாபிஷேகம் 24.04.2015
court lodgeஎழில் கொஞ்சும் மலையகத்தின் பிதுறுதலாகல மலை அடிவாரத்தில் எங்கும் பசுமை நிறைந்து காணப்படும் கந்தப்பளை கோட்லோஜ் தோட்டமானது விவசாயத்தில் மிகவும் பிரசித்தமானது. இத்தோட்டத்தில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த் கோவிலில் வீற்றிருக்கும் ஆதிஅம்பாள் இங்கு வாழும் மக்களுக்கு சகல வளமும், கேட்கும் வரம் எல்லாமும் கொடுத்து அருள்மழை பொழிந்து வாழவைத்துக் கொண்டிருக்கின்றாள். இதற்கு ஏற்றவாறே மக்களும் அம்பாளின்மீது மிகுந்த பக்தியுடனும், தமக்கு இயன்றளவிலான நன்கொடைகளை கோவிலுக்குச் வழங்கி தமது பூரண அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்துகின்றனர். இவ்வளவு காலமாக ,ம்மக்கள்; மிகுந்த ஒற்றுமையுடன்; தலைநிமிர்ந்து நிற்கும் பெருமை அம்பாளையே  சாரும். 

Read more

பழைய பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்துமாறு கோரிக்கை-

mano19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன்மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் கூறியதாவது,

Read more

சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-

tytytytyytyytytytயாழ். சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் வருடந்த பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் நோபேட் உதயகுமார் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது இவ் நிகழ்வின்போது வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்நிகழ்வின் போது தவிசாளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, நீண்ட கொடிய யுத்தம் எமது சகல வளங்களையும் வாய்ப்புக்;களையும் இளக்க செய்த போதிலும் எம்மிடம் உள்ள கல்வி நிலையை எந்த எதிரியாலும் அழிக்க முடியாத நிலை காணப்பட்டது. எம்மிடம் உள்ள கல்வி நிலையின் தன்மையே இன்றைய எமது இருப்பிற்கான காரணம் என குறிப்பிட முடியும். இதற்கும் மேலாக மேலும் எமது கல்வி அறிவின் தன்மையை மேம்படுத்துவ மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. ஒரு மிக நீண்ட அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் இன்று அறிவாயுத யுத்தம் தொடுக்கபப் பட்டுள்ளது. இவ் மறைமுகமான போரில் நாம் வெல்வதற்கு

Read more

சபை அமர்வுகள் 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-

parliamentபாராளுமன்ற சபை நடவடிக்கைளை எதிர்வரும் 27ஆம் திகதிவரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஒத்திவைத்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்துமே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் 19வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் 27ஆம் திகதியே பாரா­ளு­மன்­றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்றிரவு தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற எதிர்ப்பு நடவடிக்கை நிறைவு-

mahinda parliamentமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபாக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்காது அவர் இருக்கும் இடத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டதாரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வீதியில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அளித்த வாக்குறுதியை அடுத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பாலபட்டபெந்தி சபாநாயகரிடம் முன்னிலையானார்-

balapatta bendiலஞ்ச மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி நேற்றுமாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் முன்னிலையாகினார். ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழவின் பணிப்பாளர் மற்றும் தலைவரை சபாநாயகரிடம் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதனால் அவருக்கு பதிலாக ஆணைக்குழுவின் தலைவர் மாத்திரம் நேற்று முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அழைத்தமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு-

land slideநாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதேவேளை இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலையகப் பகுதிகளில் அதிகூடிய மழைவீழ்ச்சி 150 மில்லிமீற்றர்வரை அதிகரிக்கும் என்றும் வெள்ளப்பெருக்குத் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டம் தாமதம்-

Australia-asylum-newஇலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலியாவின் திட்டம் தாமதமடைந்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் இதுவரை தயாராகாதமையே இந்த தாமதத்திற்கான காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் கரையோர தடுப்பு முகாம்களான பப்புவா நியூ கினியா மற்றும் நவ்றூ தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப கடந்த செப்டம்பரில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதற்கமைய, புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று கம்போடியாவிற்கு பயணிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில், ஆவணங்கள் குறித்த நடவடிக்கைகள் நிறைவடையாததால் புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலியாவின் செயற்பாடு தாமதமடைந்துள்ளது.

கொத்மலை இரட்டைக் கொலைச் சந்தேகநபர் கைது-

arrest (30)நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா, கொத்மலை பிரதேசத்தில் தாய் மற்றும் சகோதரியை கொலைசெய்து தலைமறைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பொலிஸார் சந்தேகநபரிடம் இருந்து மீட்டுள்ளனர். சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்-

basilமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இன்று பிற்பகல் சுமார் 1.35மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பஷில் ராஜபக்சவை வரவேற்கும் பொருட்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அவரது ஆதரவாலர்கள் பலர் அங்கு திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் பஷில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு-

killedகொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பூதவுடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்றதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. மேலதிக ஆய்வுகளுக்காக உடற்பாகங்களை சட்ட வைத்திய அதிகாரி பெற்றுக்கொண்டுள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் இதற்கமைய ஆய்வுகள் நிறைவுபெற்ற பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் உறுதிசெய்யப்படாத நிலையில் பூதவுடலை பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர். இதற்கமைய பூதவுடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.நா. போதைப்பொருள் -குற்றவியல் தடுப்பு அலுவலகம்-

un unஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்து சமுத்திரத்தை கேந்திரமாகக் கொண்டு உலக நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகப்படுத்தை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும் ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு காரியால பிரதானி யூரி பெடட்டோவுக்கும் நீதிமன்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. ஐ.நா.வின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சபையின் 13ஆவது உயர் மட்ட குழுக்கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயமீதான கொலை முயற்சி, இருவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு-

gotabaya......பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கும்படி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர், புலிகள் இயக்கத்தின் உறுப்பினராவார். அவ்விருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுபடி நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்தே கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்ததாக அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டு அல்லது 2009ஆம் ஆண்டில், கோட்டபாய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு முயன்றனர் என்று சுப்ரமணியம் செந்தூரன் மற்றும் இருகல் பண்டார ஜகத்சந்திர சமரசிங்க ஆகிய இருவர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

செனரத்தின் வங்கி கணக்கு விவரங்களை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க உத்தரவு-

courtsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியாட் தொகுதியின் பிரதானியான காமினி செனரத், அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80 தொடர்பிலான கணக்குகள் குறித்த விவரங்கள் என்பவற்றை இரகசிய பொலிஸாரிடம் (சி.ஐ.டி) சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின்போது காமினி செனரத், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கிடைத்த முறைபாடு தொடர்பிலான அறிக்கையை இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர். நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழே இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மயில் மாளிகை விவகாரம்: லியனகேவுக்கு அழைப்பு-

police ...கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வருமாறு, இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவரும் வர்த்தகருமான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீக்கொக் மாளிகையை (மயில் மாளிகை) வேறொருவருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பில் தூய்மையான நிதிசட்டத்தின் கீழே வாக்குமூலமளிப்பதற்கு அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மயில் மாளிகையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு வருட குத்தகைக்கு ஓப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் உடன்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் பீக்கொக் மாளிகையை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என லியகே மேலும் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயாவில் தாயும் மகளும் படுகொலை-

murderநுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் 52 வயதான தாயும் 32வயதான மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி நபரை தேடி வருவதாகவும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் ஆண்டி பேச்சாய் (52) மற்றும் அவரது மகள் பெரியசாமி நித்தியகல்யாணி (32) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்தலத்துக்கு விஜயம் செய்த நாவலப்பிட்டிய நீதிமன்ற நீதவான் எல்.கே.மகிந்த சடலங்களை பார்வையிட்டதுடன், சடலங்களை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் நிலைய உதவி காவல் துறை அத்தியட்சகர் ஜி.விமலதாச தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பம்பலபிட்டியவில் பெண்ணின் சடலம் மீட்பு-

dead.bodyகொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற 45 வயதான பெண் சிற்றூழியரின் சடலம் குறித்த பாடசாலையின் களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டது சில பணிகளுக்காக பாடசாலைக்கு சென்ற குறித்த பெண் வீடு திரும்பாததால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருலப்பலன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் முகத்தில் தழும்புகள் காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 44வயது மதிக்கதக்க பெண்ணொருவரின் சடலத்தை, பம்பலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் களஞ்சியசாலையிலிருந்து மீட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணை கொலை செய்து, அவரது சடலத்தை மேற்படி இடத்தில் கொண்டுவந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆடையற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்படி பெண், கடந்த 14ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பாலியல் துஸ்பிரியோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

மகிந்தவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு எதிர்ப்பு-

parliamentபாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னரும் சுமார் 30 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்தவண்ணம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியும் பிரதமர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடி, சபாநாயகர் ஊடாக எழுத்துமூல வாக்குறுதியை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த உறுதிமொழி கிடைக்கும் வரை சபையில் இருந்து வெளியேறப்போவதில்லை எனவும் இரவும் இங்கு இருக்கப போவதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உதயசிறியின் விடுதலை பற்றி அறிவிக்கப்படவில்லை-தாயார்-

udayasri mummyஉதயசிறியின் விடுதலை பற்றி தமக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லையென சீகிரியா மலையில் உள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், எனது மகள் உதயசிறிக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டதுடன் எனது மகள் விடுதலையாகப் போகின்றார் என சில சகோதரர்களும் எனக்கு தெரிவித்திருந்தனர். எனினும் எப்போது எனது மகள் விடுதலையாகுவார் என்பது பற்றி இதுவரை எதுவும் எனக்கோ எனது குடும்பதிற்கோ தெரியாது. எனது மகளின் விடுதலைக்காக நான் காத்திருக்கின்றேன் என உதயசிறியின் தாயார் சின்னத்தம்பி தவமணி மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழப்பு-

accidentஇவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 42 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 11பேர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் 2012 ஆம் ஆண்டு 142 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 38பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதுடன் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் இடம்பெற்ற 42 விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளமை கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் அதிகரித்த தொகையாகும். எனவே வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

700 பேருடன் சென்ற படகு விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

boatசுமார் 700 பேருடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு ஒன்று தெற்கு இத்தாலியைச் சேர்ந்த லம்பெடுசா தீவின் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்தப் படகில் இருந்த 700-க்கும் மேற்பட்டோர் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் 28 பேர் மட்டுமே உயிருடன் நீந்தி கரைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இவ்விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் இத்தாலி நாட்டு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையை சேர்ந்த கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை-ஜப்பான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, சீனா இலங்கை பாதுகாப்பு விஸ்தரிப்பு-

sri lanka (4)இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஆண்டில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபிதோ ஹோபோ தலைமையில் அண்மையில் இலங்கை – ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போதே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. இதன் பொருட்டு சீனாவின் இலங்கைக்கான தூதுவர், இராணுவத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏற்கனவே இலங்கையின் இராணுவத்தினர் சீனாவில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இராணுவத் தொடர்புகளை மேலும் அதிகரித்துக் கொள்ளும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

19ஆவது திருத்தத்துக்கு ஜே.வி.பி ஆதரவு-

JVPஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு நாம் ஆதரவளிப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சில நல்ல விடயங்களுக்கு ஆதரவளிக்கும் நடைமுறையின் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை ஆதரவளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அவர் ஏனைய கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான 20ஆவது திருத்ததுடன் 19 ஆவது திருத்தத்தை போட்டு முரண்பட்டுகொள்ள வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தம் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளின் யோசனைகளுக்கு அமைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தீர்மானிக்கவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அவர், சுதந்திர கட்சிக்கு பொறுப்பளிப்பதற்கு அப்பால், அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்காக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்று ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கத் திட்டம்-

retiredஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் குறிப்பிடுகின்றது. ஓய்வுபெற்றவர்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக, ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். குறிப்பாக அரச சார்பற்ற துறைகளிலும், சுயதொழில் முயற்சிகளிலும் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பொருட்டு 28 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், ஓய்வுபெற்றவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும், விற்பனை செய்வதற்காவும் புதிதாக இணையதளமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரிடம் விசாரணை-

csn tvசீ.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவின் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, இன்றுகாலை கொழும்பு, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஆரம்ப நிறுவனராக ரொஹான் வெலிவிட்ட செயற்பட்டிருந்தார். குறித்த தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரொஹான் வெலிவிட்ட, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றிருந்ததாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இலங்கை விஜயம்-

john heryஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, மே மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவரது விஜயம் மே 2ஆம் திகதி அமையவிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை-ஜப்பான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, சீனா இலங்கை பாதுகாப்பு விஸ்தரிப்பு-

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஆண்டில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபிதோ ஹோபோ தலைமையில் அண்மையில் இலங்கை – ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போதே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. இதன் பொருட்டு சீனாவின் இலங்கைக்கான தூதுவர், இராணுவத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏற்கனவே இலங்கையின் இராணுவத்தினர் சீனாவில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இராணுவத் தொடர்புகளை மேலும் அதிகரித்துக் கொள்ளும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

19ஆவது திருத்தத்துக்கு ஜே.வி.பி ஆதரவு-

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு நாம் ஆதரவளிப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சில நல்ல விடயங்களுக்கு ஆதரவளிக்கும் நடைமுறையின் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை ஆதரவளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அவர் ஏனைய கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான 20ஆவது திருத்ததுடன் 19 ஆவது திருத்தத்தை போட்டு முரண்பட்டுகொள்ள வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தம் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளின் யோசனைகளுக்கு அமைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தீர்மானிக்கவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அவர், சுதந்திர கட்சிக்கு பொறுப்பளிப்பதற்கு அப்பால், அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்காக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்று ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கத் திட்டம்-

ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் குறிப்பிடுகின்றது. ஓய்வுபெற்றவர்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக, ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். குறிப்பாக அரச சார்பற்ற துறைகளிலும், சுயதொழில் முயற்சிகளிலும் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பொருட்டு 28 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், ஓய்வுபெற்றவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும், விற்பனை செய்வதற்காவும் புதிதாக இணையதளமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரிடம் விசாரணை-

சீ.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவின் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, இன்றுகாலை கொழும்பு, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஆரம்ப நிறுவனராக ரொஹான் வெலிவிட்ட செயற்பட்டிருந்தார். குறித்த தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரொஹான் வெலிவிட்ட, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றிருந்ததாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இலங்கை விஜயம்-

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, மே மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவரது விஜயம் மே 2ஆம் திகதி அமையவிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.