Header image alt text

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)-

01வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் (10.04.2016) ஞாயிறு மாலை 4மணியளவில் முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி ஜீன்.மக்ஸ்மலா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு க.சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வெங்கல செட்டிக்குள பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வவுனியா வடக்கு கல்வி வலய, முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.இராஜேஸ்வரன், மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி, தாண்டிக்குளம் குடும்ப நல உத்தியோகஸ்தர் திருமதி எ.ஜெயபவானி, திருநாவற்குளம் சிவன் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் திரு விக்கினபாவனந்தன், கோவில்புளியங்குளம் பாடசாலையின் ஆசிரியர் திருமதி கணேசலிங்கம் ஆகியோருடன், உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி மீரா குணசீலன், செல்வி சபீதா தர்மலிங்கம், பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Read more

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால், முல்லைத்தீவில் குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா, கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

IMG_3732களனிப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்ட “சாரல்” நூலின் மூலம் கிடைக்கப்பெற்ற மேலதிக நிதியில், முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கோட்டத்தில், சுதந்திரபுரம் இருட்டுமடு கிராமத்தில் அமைந்துள்ள இருட்டுமடு தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா வெகு சிறப்பாக வித்தியாலய முதல்வர் திரு து.யோகராசா தலைமையில் 08.04.2016 அன்று நடைபெற்றது. அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையுடன், களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தினால் புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்காக பெருந்தொகையான நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்களுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், களனிப் பல்கலைக்கழக பழைய மாணவனுமான திரு சு.காண்டீபன், களனிப் பல்கலைக்கழக மாணவர்களான திரு கி.சதீஸ், திரு க.அனோஜன், திரு இ.பிரசாந்தன், திரு எஸ். விதுசாந்த் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவனுமான எஸ். கேசவன், எஸ்.கஜூரன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர். Read more

வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ம் ஆண்டு நிறைவு மற்றும் புதுவருட நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி-(படங்கள் இணைப்பு)-

IMG_5622வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ஆவது ஆண்மு நிறைவு விழாவும், சித்திரை புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகை பணம் கையளிக்கப்பட்டது. இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்றையதினம் (10.04.2016) காலை நடைபெற்றது. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு இவ் நிதியுதவியினை றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபனிடம் வழங்கியிருந்தார். இவ் நிகழ்வில் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ப.ஆதிசன் மற்றும் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களான ராஜசேகர், பிரசாத், குணசீலன், அருட்செல்வன், குமார், கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புது வருட நிகழ்வுகளில் 13.04.2016 அன்று துவிச்சக்கரவண்டி ஓட்ட நிகழ்வும், மரதனும் நடைபெறும். அத்துடன் 14.04.2016 அன்று மைதான நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. Read more

சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவயியர்க்கான பொதுஅறிவுப் போட்டிகள்-(படங்கள் இணைப்பு)-

013எதிர்வரும் 18.04.2016 அன்று தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத் தொகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினால்; புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் ஒன்றுமுதல் தரம் எட்டுவரையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்கு நேற்று யாழ். புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் அச்சுப்பதித்தல், படம் வரைதல், ஒட்டுச் சித்திரம், சுரண்டல் சித்திரம், பொதுஅறிவுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மேற்படி போட்டிகளிலே புங்குடுதீவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போட்டிகளுக்கு ஆசிரியர்களாகவும் நடுவர்களாகவும் பின்வருவோர் செயற்பட்டிருந்தனர்…
திருமதி சுலோசனம்பிகை தனபாலன் (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம் பிரதம போஷகர்) Read more

கேரள ஆலய வெடிப்புச் சம்பவத்தில் 100ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு-

xzczxcஇந்தியாவின் கேரளாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 102பேர் உயிரிழந்ததோடு 350ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் பராவூர் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் 10,000 முதல் 15,000 பேர் வரையில் கலந்துகொண்ட மத பண்டிகை ஒன்றின்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் திருவனந்தபுரம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதோடு காயமடைந்தோருக்காக பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குறித்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்காக பட்டாசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்-

ranilசீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 அளவில் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை, தனது சீன விஜயத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

மேலும், சீனாவின் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் முதலீடு செய்வது குறித்து அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.