Header image alt text

அமரர் மண்டலநாயகம் விதானையாரின் ஞாபகார்த்தமாக திருக்கோவிற் பாமாலை வெளியீடு-(படங்கள் இணைப்பு)-

15.04.2016 Chunnakam (5)அமரர் மண்டலநாயகம் விதானையார் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய குடும்பத்தினர் திருக்கோவிற் பாமாலை என்ற நூலினை கடந்த 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று யாழ். சுன்னாகம் அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் தேவஸ்தான மணிமண்டபத்தில் வைத்து வெளியிட்டுள்ளனர். இதில் ஆலயங்களில் பாடுவதற்குத் தேவையான எல்லா தேவாரங்களும் பாமாலையாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விலே புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம், நல்லை ஆதீனம், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு திருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் சண்முகலிங்கம், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ நிதி அன்பளிப்பு-

etrtஅல்லாரை வடக்கு கொடிகாமத்தில் வசித்து வரும் அனுசியா என்பவரது குடும்பம் வாழ்க்கையில் எண்ண முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனார். கடந்த 2014ம் ஆண்டு இடம்பெற்ற சமூக வன்முறையின்போது தனது அண்ணாவையும் இழந்து தவிக்கும் அனுசியாவின் தாய் ஒர் நரம்புத் தளர்ச்சி நோயாளி. மகனின் இழப்பினை தாங்க முடியாத தகப்பன் ஒர் மனநோயாளி இதற்கு மேல் அவரது தங்கை அயினா நான்கு வயதிலேயே ஒரு நாளைக்கு இரு ஊசி போடும் அளவிற்கு நீரிழிவு நோயாளி.

இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் அனுசியா உயர்தரத்தில் சித்தி பெற்று மட்டகளப்பு விபுலானந்த கல்வியியற் கல்லூரிக்கு நேர்முகத் தேர்வு வரை சென்றுள்ளார். தாய் தகப்பன் மற்றும் தங்கை குடும்பத்தில் உள்ள மூவருமே நோயாளிகள் மாதாந்தம் கிளினிக் மற்றும் தங்கைக்கு ஒவ்வொரு நாளும் இரு ஊசி என்ற நிலையில் அனுசியாவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப் போராட்டத்தில் அவதியுற்று வரும் நிலையில் எமது சங்கத்தின் செயற்பாடுகளை ஊடகங்களினூடாக அறிந்த அனுசியா மருத்துவத்திற்கான உதவியைக் கோரியிருந்தார். இவரின் குடும்ப நிலை அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் நிலை அறிந்தும் லினோஸ்சின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் குடும்பத்திற்கான மருத்துவச் செலவிற்கு 20,000 நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

தாயகம் திரும்பியோர் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்-

refugeesஇந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய பலர் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பி மீள்குடியேறியுள்ளவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பலர் இந்தியாவில் குடியேறி பல வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது, அரசாங்கத்தின் அறிவித்தலை ஏற்று நாடு திரும்புகின்றனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களில் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அங்கு திருமணம் செய்தவர்களாகவும் உள்ளனர். நாடு திரும்பும் இவர்களிடம் இலங்கை பிரஜாவுரிமையை பெற அரசு பல்வேறு தகவல்களை கோருவதால், அதனை வழங்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். அத்துடன், பிரஜாவுரிமையைப் பெற 25,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக தாம் தொழில் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், அடையாள அட்டை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் பிரஜாவுரிமையை பெற இந்த அரசாங்கம் கையாளப்படும் வழிமுறைகளை இலகுபடுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் இலங்கையர் அங்கு தங்கி இருந்தமைக்கான பதிவுகளின் அசல் பிரதிகள் வேண்டுமென கோரப்படுகின்றது. ஆனால் அங்கிருந்து வரும்போது அசல் பிரதிகள் மீளப்பெறப்பட்டு நகல் பிரதிகளை மாத்திரமே கொண்டுவர அனுமதிக்கப்படுகின்றது.

மன்னார் விபத்தில் பெந்தகொஸ்து சபை போதகர் உயிரிழப்பு-

tryyyயாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் விபத்துக்களானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபையின் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, இலங்கை பெந்தகோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் மன்னார் தள்ளாடி பிரதேசத்தில் காணப்படும் விமானப்படை தளத்திலேயே விபத்துக்ககுள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த விபத்தின் போது, தாவீது ராஜா(வயது-58) என்றே போதகரே உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பெந்தகோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான போதகர் தாவீது ராஜா தலைமையில் இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் ஆறு அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 9 பேர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதன்போது, மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் வைத்து குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்-

courts (1)கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நீதவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதவானாக ஏ.ஏ. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நீதவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கல்விகற்று அண்மையில் நாடு திரும்பியவராவார்.