வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)-

01வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் (10.04.2016) ஞாயிறு மாலை 4மணியளவில் முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி திருமதி ஜீன்.மக்ஸ்மலா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு க.சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வெங்கல செட்டிக்குள பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வவுனியா வடக்கு கல்வி வலய, முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.இராஜேஸ்வரன், மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி, தாண்டிக்குளம் குடும்ப நல உத்தியோகஸ்தர் திருமதி எ.ஜெயபவானி, திருநாவற்குளம் சிவன் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் திரு விக்கினபாவனந்தன், கோவில்புளியங்குளம் பாடசாலையின் ஆசிரியர் திருமதி கணேசலிங்கம் ஆகியோருடன், உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி மீரா குணசீலன், செல்வி சபீதா தர்மலிங்கம், பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்,இசைவும் அசைவும், வினோத உடை நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவிற்கு புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அனுசரணை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

01 02 03 04 05 vavuniya rocket 10.04.2016 (3) vavuniya rocket 10.04.2016 (4) vavuniya rocket 10.04.2016 (5) vavuniya rocket 10.04.2016 (6) vavuniya rocket 10.04.2016 (7) vavuniya rocket 10.04.2016 (8) vavuniya rocket 10.04.2016 (9) vavuniya rocket 10.04.2016 (10) vavuniya rocket 10.04.2016 (11) vavuniya rocket 10.04.2016 (12) vavuniya rocket 10.04.2016 (13) vavuniya rocket 10.04.2016 (14) vavuniya rocket 10.04.2016 (15) vavuniya rocket 10.04.2016 (16) vavuniya rocket 10.04.2016 (17) vavuniya rocket 10.04.2016 (18) vavuniya rocket 10.04.2016 (19) vavuniya rocket 10.04.2016 (20) vavuniya rocket 10.04.2016 (21) vavuniya rocket 10.04.2016 (22) vavuniya rocket 10.04.2016 (23)