மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்- 

wqeweமட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் வீட்டின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் மாநகரசபை ஊழியர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 அளவில் மட்டக்களப்பு மாநகரசபையில் இருந்து காந்தி பூங்கா வரையில் அமைதியான முறையில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், காந்தி பூங்காவில் இருந்து மீண்டும் மாநகரசபை வரையில் பேரணியாக சென்றனர். “தன்னலமற்ற பொதுச்சேவைக்கு கிடைத்த வெகுமதி வன்முறையா?, இன்று மாநகர ஆணையாளருக்கு நாளை?, மாநகர ஆணையாளரின் வதிவிடத்தில் நடந்த அனர்த்தத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்து..” உட்பட பல சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். கடந்த 09ம் திகதியிரவு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம்மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களுக்கு 24ம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம்-

graduateபுதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களை இணையம் மற்றும் எழுத்து மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு முடியும். கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இதேவேளை, புதிய கல்வி ஆண்டு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்த அனுமதிப் பத்திர கையேடு எதிர்வரும் 22ம் திகதி வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பில் நாளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையூடான கடத்தல்களை தடுக்க விசேட பயிற்சி-

navyசர்வதேச கடல் எல்லையூடாக முன்னெடுக்கப்படும் கடத்தல்களை நிறுத்துவதற்கு கடற்படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்படை உறுப்பினர்களை பயிற்சியின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்வதேச கடல் எல்லையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான இரண்டு யுத்த கப்பல்கள் அடுத்த வருடம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும் கடற்படை தளபதி கூறியுள்ளார். இதேவேளை, சர்வதேச கடல் எல்லையில் முன்னெடுக்கப்படும் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாக மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் உட்பட உறுப்பினர்களின் முதலாவது சந்திப்பு..!! (படங்கள் இணைப்பு)
41c52d87-fe6e-42c4-afad-ec8c4a7b6078சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரமல்லாது அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்குமான கூட்டம் நேற்றையதினம் (17.04.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30மணியளவில் ஆரம்பமாகி சுமார் மாலை 6.00 மணிவரை மிகவும் ஆரோக்கியமாகவும், சுமுகமாகவும் நடைபெற்றது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் அமைதி வணக்கத்துடன் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்ததோடு, இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்ட நேர ஒழுங்குகள், கூட்டத்திற்காக முன்கூட்டி அறிவிக்கப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்கள், கடந்த 28.03.2016அன்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டம் மற்றும் கடந்த 30.03.2016 இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டம் என்பவற்றின் கூட்ட அறிக்கையினை வாசித்தார். 

தொடர்ந்து, கடந்த பொதுச்சபைக் கூட்டத்தின் போது பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட திரு. இளையதம்பி சிறீதாஸ் அவர்கள், தான் புதிதாக தொழில் தொடங்குவதால் உள்ள வேலைப்பளு காரணமாக பொருளாளர் பதிவிலிருந்து இராஜினாமா செய்வதாக எழுத்துமூலம் கையளித்திருந்த கடிதம் குறித்து தெரிவிக்கப் பட்டது.
“ஊர் நோக்கிய” செயல்பாட்டுக்காக; எவர் குறித்தும் எந்தவொரு தேவையற்ற விமர்சனங்களையோ, கருத்துக்களையோ தெரிவிக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கையை மட்டும் சிந்தித்து செயலாற்றுமாறு தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட சபையினர், பொருளாளராக தெரிவு செய்யப்பட்டு, தற்போது ராஜினாமா செய்த திரு.இளையதம்பி ஸ்ரீதாஸ்   அவர்களின் கடிதத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கையாக நிர்வாகம் முன்மொழிந்த கருத்துக் குறித்து அபிப்பிராயம் கேட்கப் பட்டது.    
இதனைத் தொடர்ந்து சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவராலும், ஏகமனதாக புதிய பொருளாளராக திரு. அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்களும், உப பொருளாளராக திரு. சுந்தரம் கிருஸ்ணராஜா (கிசி) அவர்களும், இவர்களுக்கு துணையாகவும் அதாவது வங்கி செயல்பாடுகளை மேற்பார்வையிட திருமதி. தனலட்சுமி தமிழ்வாணன் அவர்களும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனைவரினாலும் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர். 
தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இக் கருத்துக்கள் யாவும் உள்சுற்றுக்கு உட்படுத்தப்பட்டு, விபரமாக செயலாளர் அவர்களினால் அடுத்த கூட்டத்தில்; வைத்து வாசிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. 
இதன்பின்னர் பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட திரு. அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்கள் உரையாற்றினார். அவரது உரையினைத் தொடர்ந்து உப பொருளாளர் திரு. சுந்தரம் கிருஸ்ணராஜா (ரீ.சீ) அவர்களும் திருமதி. தனலட்சுமி தமிழ்வாணன் அவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்த போது அவை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேற்படிக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் வெளிநாடு சென்றுள்ள உபதலைவர் சஞ்சீவ், உபசெயலாளர் யுகன், இளையோர் அணி உறுப்பினர் ஆதி ஆகியோர் தமது காரணங்களை (அதாவது விடுமுறைக்காக சென்றுள்ளதையும், அடுத்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்வோம் எனவும்) அறிவித்துள்ளதையும், அதேபோல் திரு.ரமணன் அவர்களும் எழுத்து மூலம் அறிவித்து இருந்ததையும் கூட்டத்தில் கலந்து கொண்டோரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
இதேவேளை இனிவரும் காலங்களில் “தகுந்த காரணமின்றியும், எந்த ஒரு அறிவித்தலை விடுக்காமலும்” தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு மேல் சமூகமளிக்காத ஒன்றிய உறுப்பினர்கள், அது குறித்து “எழுத்துமூலம், விளக்கம் தராதபட்சத்தில்” அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக ஒன்றியத்தின் எந்தவொரு விடயத்துக்கும் அழைப்புகள் அனுப்புவதில்லை எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அடுத்து, அங்கத்தவர் நிதி மற்றும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கென சேகரிக்கப்படும் நிதியில் எந்த ஒரு சதமேனும் சுவிஸிலே எந்த ஒரு கூட்டங்களுக்கும், நிகழ்விற்கும் (விழாவிற்கும்) செலவு செய்வதில்லை எனவும், சேர்க்கப்படும் நிதிகள் புங்குடுதீவு அபிவிருத்திக்காகவும், புங்குடுதீவிலுள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மாத்திரமே செலவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், புங்குடுதீவின் பன்னிரண்டு வட்டாரங்களுக்கும் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆயினும் வட்டாரத்திற்கு மேலதிகமாக இவ்விரண்டு பேர் வீதம் வட்டாரத்திற்கு மூன்றுபேராக மொத்தம் முப்பத்தாறு பேரைத் தெரிவு செய்வது என இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. 
அத்துடன் மேற்படி வட்டாரங்களுக்கான பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் புங்குடுதீவிலுள்ள தத்தமது பகுதிக்கான தேவைகள் குறித்து அங்குள்ளவர்களிடம், அதாவது புங்குடுதீவில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசித்து அங்குள்ள தேவைகள் தொடர்பில் நிர்வாகத்திற்கு “எழுத்துமூலம்” கையளிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து மூலம் கையளிக்காத பட்சத்தில் அவ்விடயம் தொடர்பில் கூட்டங்களில் கதைக்கவோ, பிரஸ்தாபிக்கவோ கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
மற்றும், கடந்த நிர்வாகத்தினால் நடாத்தப்பட்ட “வேரும் விழுதும்” விழாவின் போது சேகரிக்கப்பட்ட நிதியில் மேலதிகமாக எஞ்சியிருக்கும் பணத்தில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் உணவுகூடம் அமைத்தல், புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலைக்கான மலசல கூடம் அமைத்தல், புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் மலசலகூடம் புனரமைத்துக் கொடுத்தல், குழாய் அமைத்துக் கொடுத்தல் மற்றும் கரந்தலி, இறுபிட்டி ஆகிய பகுதிகளில் கிணறுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளமை போன்ற செயற்பாடுகள் கூட்டத்தில் பங்கெடுத்திருந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் இவற்றுக்குரிய செலவுகள் ஓர் குறிப்பிட்ட அளவிற்குள் அமைதல் வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. 
இவ்வேலைகளைத் தொடர்வதற்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகின்ற பட்சத்தில் ஒன்றிய நிதியிலிருந்தோ, வேரும்விழுதும் விழாவிற்கென நிதி தருவதாக எழுதி இதுவரையிலும் தராமல் இருப்போர் அல்லது வர்த்தக விளம்பரம் தந்து அதற்கான நிதியினை இதுவரை செலுத்தாமல் இருப்போரிடமிருந்தோ உடனடியாக அந்த நிதிகளைப் பெற்று மேற்படி  வேலைகளை செய்து முடிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 
அத்துடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “எந்தவொரு செயற்பாட்டிலும் அரசியல் கலந்திருக்கக் கூடாது என்பதோடு, அரசியல் சார்புத் தன்மையும் இருக்கக்கூடாது” என்று தலைவர் ரஞ்சன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும், கடந்த 14.04.2016 அன்று புங்குடுதீவு சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட தீவைச் சேர்ந்த அனைத்து இளைஞர், யுவதிகளுக்கான விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா அதனைத் தொடர்ந்து அன்றையதினம் இரவு விழிப்புலனற்றோரினால் நிகழ்த்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சிக்கு அவர்கள் எழுத்துமூலம் கோரியிருந்த தொகையான (70,000) எழுபதினாயிரம் ரூபாவை வழங்குவதெனவும் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டதை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
***கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் ஆலோசனைகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…
1)இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவராலும் முதலாவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், முதல் வேலையாக புங்குடுதீவில் வதியும் (அதாவது அவர்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், புங்குடுதீவில் குடியேறி வாழும் எவராக இருந்தாலும்) அவர்கள் வெளிநாடுகளிலிருந்து (எவரிடம் இருந்தும்) எந்த ஒரு வசதி வாய்ப்பினையும், உதவிகளையும்  பெற்றுக் கொள்ளாத நிலையில் வறுமைக் கோட்டின்கீழ் அவர்கள் இருப்பவர்களாக இருந்தால், எந்தஒரு பாகுபாடும் இன்றி அக்குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதென தீர்மானிக்கப்பட்டது. (இதுகுறித்து வடாரப் பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப் பட்டோர் எழுத்து மூலம் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்)
2) புங்குடுதீவில் பரீட்சையில் அதாவது  புலமைப் பரிசில் பரீட்சை, கல்வி சாதாரணதரம், போன்றவற்றில் வெற்றியீட்டும் மாணவ மாணவிகளுக்கு “புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால்” சிறப்புப் பரிசில்களை வழங்கி, அவர்களை ஊக்கப் படுத்துவதுடன் அவர்களின் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைக்கும் உதவுவதேனவும் தீர்மானிக்கப் பட்டது. (மேற்படி மாணவ மாணவிகள் குறைந்த பட்சம் பரீட்சைக்கு இரண்டு வருடத்துக்கு முன்பிருந்தே புங்குடுதீவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்)
3) முடிந்தவரை மிக விரைவில் வெளிநாடுகளில் உள்ள ஏனைய புங்குடுதீவு ஒன்றியங்களுடன் கலந்துரையாடி புங்குடுதீவு மக்களின் வேலைவாய்ப்புகளுக்கான ஏற்பாடுகளை அதாவது வேலை வாய்ப்புக்கான ஒரு திட்டத்தினை (தொழிற்சாலை ஒன்றினை) வகுப்பதெனவும், இதனை எந்தவகையில் ஆரம்பித்து முன்னெடுக்கலாம் என்பதை மிக விரைவில் தீர்மானிப்பதெனவும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனைவராலும் ஒருமித்து கருத்து கூறப்பட்டது. இதுகுறித்து தலைவர் ரஞ்சன் அவர்கள் ஏனைய ஒன்றியங்களுடன் உரையாடித் தெரிவிக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப் பட்டது.
4) புங்குடுதீவின் தண்ணீர் பிரச்சினை, போக்குவரத்துப் பாதைகள் புனரமைப்பு போன்றவை குறித்து வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் முதற்கட்டமாக கலந்து ஆலோசிப்பது எனவும், இதனை தலைவர் ரஞ்சன் அவர்கள் மேற்கொண்டு தெரிவிக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப் பட்டது. 
5) புங்குடுதீவின் வரவேற்பு வளைவு உட்பட சில செயற்பாடுகளில் உடனடிக் கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றுவதெனவும்   தீர்மானிக்கப் பட்டது.
6) மற்றும், சுவிசில் உள்ள புங்குடுதீவு மக்களுடன் ஏனைய தமிழ் மக்களையும் இணைக்கும் வகையிலும், சுவிசில் உள்ள புங்குடுதீவு மக்கள் ஒன்றுகூடி உரையாடும் வகையில் வருடாவருடம் “வருடத்தின் கோடை காலத்தில் சுவிஸ்லாந்தில் விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதெனவும், குளிர் காலத்தில் வேரும்விழுதும் என்ற பெயரில் “ஒன்றுகூடி உண்டு மகிழ்தல்” என்னும் நிகழ்வினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. (இவற்றுக்குரிய செலவுகள் கட்டுப்பாட்டுக்குள்  இருக்க வேண்டும் எனவும், மேற்படி செலவுகளை ஒன்றியத்தின் நிதியில் இருந்து எதுவும் எடுக்காது செய்வதெனவும் தீர்மானிக்கப் பட்டது) 
7) இதேவேளை புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றியத்துக்கு அங்கத்தவர்களை பெருமளவில் சேர்க்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. (கூடுதலான அங்கத்தவர்களை சேர்ப்பவர்களை கவுரவிப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது.)
தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய விளையாட்டுப் பொறுப்பாளராக திரு. சின்னத்துரை லக்ஸ்மன் அவர்கள் சபையில் கலந்து கொண்டோரினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக திருமதி. லக்சிகா முரளிகாந்த் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்றன. 
கருத்துப் பகிர்வுகளின் நிறைவில் செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன், தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோரினால் உரிய பதில்கள் வழங்கப்பட்டு அவை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (மேற்படி, கருத்துக்களை அவற்றுக்கான பதில்களுடன் எழுத்துமூலம் உள்ளக சுற்றில் வைத்திருப்பதென தீர்மானிக்கப்பட்டது)
செயலாளர் திரு. சதானந்தன் அவர்களினால் வழங்கப்பட்ட பதிலில் அவர் கூறுகையில், 
புங்குடுதீவில் நாம் ஏற்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிரான்ஸ், லண்டன், கனடா, சுவிஸ் ஒன்றியங்களினால் இணைந்து திரு.சண்முகலிங்கம் அவர்களைத் தலைவராகவும், திருமதி. சுலோசனாம்பிகை அவர்களைப் பொருளாளராகவும் கொண்டு புங்குடுதீவில் உள்ள மக்களினால் உருவாக்கப்பட்ட “புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்துடன்” இணைந்து தொடர்ந்து செயலாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினாலும் கருத்துக்கள் பகிரப்பட்டு, அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டு “நாம் ஒன்றுபட்டு செயலாற்றுவோம் என்று அவர் கூறியதோடு, தொடர்ந்தும் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவோம்” எனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து அமைதி வணக்கத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. 
**************************************
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
***தலைவர்…
பெயர் – திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) -077. 948 52 14
***செயலாளர்… 
பெயர் – திரு.செல்லத்துரை சதானந்தன் (லீஸ் சதா) -078. 851 87 48
***பொருளாளர்… 
பெயர் – திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) 079. 937 32 89
***உப பொருளாளர்…
 பெயர் – திரு.சுந்தரம் கிருஷ்ணராஜா (கிசி)
***உபதலைவர்… 
பெயர் – திரு.லிங்கம் சஞ்சீவ் -079. 895 53 54
***உபசெயலாளர்… 
பெயர் – திரு.கனகசபை கலியுகன் -078. 804 41 42
***இளைஞர் அணி (நால்வர்)
1. திரு.கனகசபை சதீஸ் -பொறுப்பு- 078. 914 70 96
2. திரு.கனகராஜா ஆதர்சன் (ஆதி) – 079. 233 76 02
3. திருமதி.முரளிகாந்த் லக்ஸிகா – 079. 447 99 95
4.     திரு.தகீதன் பாலசிங்கம் (கீதன் தயா) – 079. 861 45 34
*** விளையாட்டுப் பொறுப்பாளர் 
திரு. சின்னத்துரை லுக்ஸ்மன்.
***மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் 
திருமதி.லக்சிகா முரளிகாந்த் 
***துணைப் பொருளாளர் & வங்கி செயல்பாடு
திருமதி. தனலெக்சுமி தமிழ்வாணன் (தனம்)
 
***ஆலோசகர்கள் (நால்வர்)
1. திரு.தாமோதரம்பிள்ளை பிறேம்குமார்
2. திரு.பாலன் சிவப்பிரியன்
3. திரு.கனகசிங்கம் பிரபா
4. திரு.அரியதாஸ் பிரதீபன்
***கணக்காய்வாளர்கள் (இருவர்)
1. திரு.சதாசிவம் பன்னீர்செல்வன்
2. திரு.நல்லைநாதன் முரளிகாந்த்
***வட்டாரங்களுக்கான பொறுப்பாளர்கள் –
1. முதலாம் வட்டாரம் – திரு.கார்த்திகேசு யோகன் // 
2. இரண்டாம் வட்டாரம் – திரு.துரைசிங்கம் சாந்தரூபன் (ரூபன் / கரன்) 
3. மூன்றாம் வட்டாரம் – திரு.தேவதாஸ் றொபின்சன் //
4. நான்காம் வட்டாரம் – திரு.சிறீ சபேசன் //
5. ஐந்தாம் வட்டாரம் –  திரு.சிவலிங்கம் சிவகுமார் //
6. ஆறாம் வட்டாரம் – திரு.மகாதேவன் பாஸ்கரன் // 
7. ஏழாம் வட்டாரம் –  திரு.சண்முகம் மோகனதாஸ் // 
8. எட்டாம் வட்டாரம் – திருமதி.தனம் தமிழ்வாணன் // 
9. ஒன்பதாம் வட்டாரம் – திரு.பத்மநாதன் வசந்தன் // 
10. பத்தாம் வட்டாரம் – திரு.சீவரத்தினம் சிவகுமார் // 
11. பதினொராம் வட்டாரம் – திருமதி.றமணி வசந்தன் // 
12. பன்னிரண்டாம் வட்டாரம் – திரு.நல்லைநாதன் விஜயகாந்த் //
(மேற்படி நிர்வாகசபை, இளைஞர் அணி ஆகியோருடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அவர்களின் தொலைபேசி இலக்கங்களையும் பதிவிட்டு உள்ளோம்.)
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.
18.04.2016 
7fbc9b07-05c9-4cc9-8556-e3d2d39eb70a 9df04254-7e63-4644-bbef-44e1ed0abfb8 41c52d87-fe6e-42c4-afad-ec8c4a7b6078a9637b6e-65f8-453c-a295-c0170efd75bf04e2d6fb-3947-4a22-8f0b-a4b655bba4de776fd3ff-171e-41e3-b2e0-02a295e89893f37fe422-bd68-4879-8487-0febd9d2b1c4