இலட்சியத்துக்காக கொள்கை ரீதியில் ஒன்றுபட்டு பயணிக்கும் நாம், பதவிக்காக த.தே.கூட்டமைப்பை விட்டு விலகப்போவதில்லை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டு விடயம் தொடர்பாக இன்னமும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படவில்லை. மீண்டும் கலந்துரையாடும்பொழுது அது தொடர்பாக ஒரு சுமுகமான முடிவுக்கு வரமுடியும் என நம்புகிறேன். Read more