Header image alt text

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பும் 17.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. கறுப்பையா ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், விசேட விருந்தினராக வட மாகாண மீன்பிடி, கமநல, விவசாய அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

வவுனியா சமளங்குளம் கிராமத்தில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் இளைஞர்களால் கிராமிய செயலகம் திறப்பு விழா அண்மையில் கழகத்தின் தலைவர் திரு கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. பிறப்புக்குறிப்பு மற்றும் வதிவிடத்தை உறுதிசெய்யும் ஆவணம் இல்லாத காரணத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவ்வாறானவர்களுக்கு உடன் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக இன்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 9 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணிவரை குறித்த 9 முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக, நேற்று பானம பிரதேசத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் 600 தென்னங்கன்றுகள் விநியோகிக்கபட்டதாகவும், குறித்த தென்னங்கன்றுகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more

2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 520 இலங்கை ஏதிலிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை முகவரகம் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. 619 குடும்பங்களைச் சேர்ந்த குறித்த இலங்கை ஏதிலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் தமிழகத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளதாக இலங்கை முகவரகம் குறிப்பிட்டுள்ளது. Read more

2017ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 3ஆயிரத்து 400முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார். முகநூலில் புகைப்படங்களை மாற்றுவது தொடர்பிலேயே அவற்றுள் பெரும்பாலான முறைப்பாடுகள் ஆகும். Read more