Posted by plotenewseditor on 24 December 2017
Posted in செய்திகள்
D.Sithadtham M.P
வட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.
எனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வேட்பாளர்களிடம் காணப்பட்டமையே தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சிக்கு முரண்பாடு ஏற்பட பிரதான காரணம் என்றும் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.
பல தரப்பினர் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவீதத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டார். Read more