Header image alt text

சிங்­கப்பூர் பிர­தமர் லீ சின் லுன் அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வர­வுள்ளார். சிங்­கப்பூர் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பா­ணை­யை­யேற்று இலங்­கைக்கு வரும் சிங்­கப்பூர் நாட்டு பிர­தமர் லீ சின் லுன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரு­டனும் அர­சியல் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் கலந்துரையாடுவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய காரியாலயத்திற்கு இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் இதுவரை 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி முதல் இதுவரை, தேர்தல் குறித்த 10 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 6 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் உரிமைகோரப்படாத உந்துருளிகள் பல நேற்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போதை பொருள் விநியோகம், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களின்போது கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொருப்பில் இருந்த ஒரு தொகுதி உந்துருளிகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. Read more

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நலின் டி சொய்சாவிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையின் அதிகாரிகளின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான ஒரு தொகை விண்ணப்பங்கள், பலவந்தமாக பரீசிலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து மருத்துவ சங்கத்தின் பதிவாளர் மருத்துவர் டெரன்ஸ் டி சில்வாவிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் மருதானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Read more

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று 299வது நாளாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமது போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த மாசி மாதம் முதலாம் திகதி முதல் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.