சிங்­கப்பூர் பிர­தமர் லீ சின் லுன் அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வர­வுள்ளார். சிங்­கப்பூர் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பா­ணை­யை­யேற்று இலங்­கைக்கு வரும் சிங்­கப்பூர் நாட்டு பிர­தமர் லீ சின் லுன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரு­டனும் அர­சியல் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் கலந்துரையாடுவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.