Header image alt text

IMG_1326 - Copyவடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது க.சிவநேசன் அவர்கள் குறித்து ஒதுக்கிய அபிவிருத்தி நிதி – 2017 திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் முல்லைத்தீவு பகுதி விவசாய முயற்சியாளர்களுக்கு விவசாய உபகரணங்களும்,

சேதன பசளை உருவாக்க திட்டத்திற்கான உதவிகளும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்களால் 28.11.2017 இல் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் மாகாண அமைச்சின் அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Read more

bavanஉலக மீனவர் தினம் மன்னாரில் 28.11.2017 இல் நடைபெற்றது. இதில் மாகாண விவசாய அமைச்சர் கௌரவ க.சிவநேசன், Fr. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் பிரதிநிதியான அப்போஸ்தலர் பரிபாலகர் Fr. விக்டர் சூசை, தேசிய மீனவர் ஓத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன் குமார, செயலாளர் பிரதீப் வைஸ்,

தெற்கு மீனவ அமைப்பு(மாத்தறை), மீனவ பெண்கள் சம்மேளனம் திருமதி நெலுக்கா வீரக்கொடி (காலி), சஜெவ ஸாமிர, தேசிய மீனவ தொழில் சங்கம், சிவில் அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், பிரஜைகள் குழு போன்றவர்கள் பங்குபற்றியிருந்தனர். Read more

P1470088 - Copyயாழ். நீர்வேலி கரந்தன் கலைவாணி சனசமூக நிலைய காணி அன்பளிப்பு செய்தவர் நினைவுக்கல் தரைநீக்கமும், புனரமைப்பு செய்யப்பட்ட சனசமூக நிலைய கட்டிட திறப்பு விழாவும் (29.11.2017) புதன்கிழமை மாலை 6.45அளவில் கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

BN-WI814_nkcycl_SOC_20171129064141வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஐ.நா. வின் எச்சரிக்கை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அண்மைக்காலமாக அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று ஐ. நா. வின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற கூட்டத்தில் வட கொரியாவின் அணுவாயுதத் திட்டம் மற்றும் அதிநவீன ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவதற்கு வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

courtsஉள்ளூராட்சி மற்ற தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

அதன்படி , இந்த வர்த்தமானி அறிவித்தலை தடுத்து டிசம்பர் 4ம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் வெளியிடப்பட்ட இடைக்கால தடையுத்தரவை ரத்துச் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பீ. தெஹிதெனிண, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் டிரான் குணரத்த ஆகிய மூவரடங்கிய நீதிபதி குழுவினர் உத்தரவிட்டுள்ளனர். Read more

dfgdfgfgகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை மிக விரைவாகத் திறந்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரி, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, இன்று மேற்கொள்ளப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் அம்பாறை மாவட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் இடம்பெற்றதுடன், இதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், “சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதி பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்”, “அரசியல் கைதிகளை உடனடியான விடுதலை செய்ய வேண்டும்”, Read more

image_fbe6768e47சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில், மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூவின சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். “வன்முறைகளற்ற வீடு, சமூகம், நாடு எமக்கு வேண்டும்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை, நீதி, சமாதனம் எமக்கு வேண்டும்”, Read more

image_125d33260cயாழ்ப்பாண குடாநாட்டில், படையினரின் வசம் இருந்த மேலும் ஒரு தொகுதி பொதுமக்களுக்குச் சொந்தமான காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பின் 16ஆவது கட்டமாக, யாழ்., வலி வடக்கு, வயாவிளான், வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் வசம் இருந்த 29 ஏக்கர் காணியே, இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் இன்று (நடைபெற்ற நிகழ்வில், காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்துள்ளார்.

anarthamநாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை. இயற்கை அனர்த்தம் காரணமாக 5பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தவிர, 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ரூபாவை வழங்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். Read more

1649006817electricityநாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர்.

வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். அனர்த்தம் காரணமாக இன்னுமொருவரும் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more