வவனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபர் முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள் ஆகியோரால் வரவேற்கப்பட்டார். வரவேற்பின் பின் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல் என்பன இடம்பெற்றன. Read more