Header image alt text

IMG_3090வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 10.11.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல்நாயகி அவர்களும், Read more

IMG_3272தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள திருநாவற்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக Read more

UN human right commssionஇலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச பருவகால மீளாய்வு கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது.

இந்த மீளாய்வு கூட்டமானது ஜெனிவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால், வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களின் அறிக்கைகள் என்பன இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

election meetஉள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. 2043ஃ57 என்ற வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் சம்பந்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றை தீர்மானிப்பதற்கு குறித்த 2043ஃ57 என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது கட்டாயமாகும். Read more

teacherகல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வியின் புதிய தொழில்முறை பாடநெறிக்காக 2ஆயிரத்து 100 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் குறித்த பாடநெறிக்காக நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more

deadமதுபோதையில் வீதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் வீதியில் விழுந்த போது, முச்சக்கரவண்டி மோதியதால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். Read more

hisbullaலெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி சௌதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், சௌதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாத் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக சௌதி அவரை வைத்துள்ளதாக ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார். லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை சௌதி தூண்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா அமைப்பு இரானுடன் கூட்டாளியாக உள்ளது. Read more

deadதிருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வௌ குளத்திற்கு அருகில் நேற்று அரச பேருந்துடன் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பேசாலை பகுதியைச் சேர்ந்த நகுலன் தசுதரண் (07) என தெரியவருகின்றது. வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அரச பேருந்து, சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோதிவிட்டு சென்றுள்ளதாகவும், அதனையடுத்து மொறவௌ பொலிஸார் பஸ்ஸை நிறுத்தி சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. Read more

dead-bodyதிருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர், நேற்றுமாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிகாந் சுரேன் (18 வயது) எனும் இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார். வயல் உழுதுவிட்டு, உழவு இயந்திரத்தைக் கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்துக்குள் இறக்கியபோது, உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் சிக்குண்டமையால் இளைஞன் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

maithripalaநாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘

குழந்தைகளைக் காப்போம்’ என்ற தேசிய திட்டத்தின் கீழ், பொலனறுவை ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்தத் திட்டம் குழந்தைகளின் உடல்வள, உளவள அபிவிருத்திக்கு ஏற்ற ஒரு சூழலைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.