Header image alt text

வவுனியாவில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். Read more

வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இலங்கை மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருவியம் அருந்தராசா என்பவரே கடத்தப்பட்டுள்ளார். Read more

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதின்மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more

அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து பிரசாங்களும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 7ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேரவெவையை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சிலர் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த பகுதியில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வலி தெற்கு பிரதேச சபை

1. நாகேந்திரம் இலட்சுமிகாந்தன் (வட்டாரம் 02)
ஏழாலை மேற்கு, சுன்னாகம்

2. வேலாயுதம் செல்வகாந்த் (வட்டாரம் 03)
சூராவத்தை, சுன்னாகம்

3. சோமலிங்கம் பரமநாதன் (வட்டாரம் 04)
குப்பிளான் தெற்கு, ஏழாலை

4. இரத்தினசிங்கம் கெங்காதரன் (வட்டாரம் 05)
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, புன்னாலைக்கட்டுவன்

5. கருணைநாதன் அபராசுதன் (வட்டாரம் 06)
ஏழாலை கிழக்கு, ஏழாலை Read more

D.Sithadtham M.P

வட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.

எனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வேட்பாளர்களிடம் காணப்பட்டமையே தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சிக்கு முரண்பாடு ஏற்பட பிரதான காரணம் என்றும் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.

பல தரப்பினர் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவீதத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டார்.  Read more

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது கந்தரோடை இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இன்றுமுற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தேர்தல் சம்பந்தமான விளங்கங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
Read more

வவுனியா மாவட்டம்

வவுனியா நகர சபை

1. சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை
2. சிவலிங்கம் இரவீந்திரன்
3. வேல்நாச்சியாள் துரைராஜா

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை

1. செல்வராணி கமலேஸ்வரன்
2. முகம்மதுமுஸ்தபா குமார்தீன்
3. பழனியாண்டி செல்வகுமார்
4. அகிலாம்பாள் ஆரியசிறி Read more

யாழ். ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்தில் நேற்றுமாலை 05.00 மணியளவில் எழுதாரகை படகு பயணத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

எழுவைதீவு – அனலைதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் 453 குடும்பங்களின் நன்மை கருதி அரசினால் 1130 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய படகு சேவை தொடக்கி வைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் றெஜினோல்குரே இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலாளர் மஞ்சுளா, உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.