Header image alt text

unஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தேர்தலுக்காக இந்தியாவின் டல்வீர் பண்டாரியின் பெயரை இலங்கை முன்மொழிந்துள்ளது. இந்த தேர்தல் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இதன்படி, மூன்று சுற்று தேர்தல்களின்மூலம் ஐந்து நீதிபதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். ஒவ்வொரு நாடும் ஐந்து வாக்குகளை அளிக்கமுடியும். இதன்போது ஒரே வேட்பாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை ஒரு நாடு அளிக்கமுடியும். Read more

marsசெவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை மாற்றம், தண்ணீர் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா மங்கல்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

இதேபோன்று நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய மேலும் விண்கலம் ஒன்று அடுத்த ஆண்டு அனுப்பப்பட உள்ளது. அந்த விண்கலத்தில் மனிதர்களின் பெயர்களை சிலிகான் சிப்பில் தலைமுடியை விட சிறிய அளவில் எழுதி அதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவர். அதற்கான பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பெயர்களை இணையம் மூலம் பதிவு செய்து வருகின்றனர். Read more

policeசுமார் 5000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக 2900 சிவில் சேவையாளர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். Read more

geetha piyasena gamageவெற்றிடமான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் நிலவும் வெற்றிடம் குறித்து சபாநாயகர் நேற்று சபையில் தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், இன்றுகாலை கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பியசேன கமகே பதவியேற்றதுடன், அவர் ஆளுங்கட்சியின் வரிசையில் அமர்ந்ததாக பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். Read more

indonesiaஇலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்பா என்னும் கிராமத்தில் தங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக அந்நாட்டின் இணையத்தளம் கூறியுள்ளது.

சுற்றுலாப்பயணிகளாக சென்ற அவர்கள், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக கடந்த மூன்று தினங்களாக வீடுகளில் தங்கியிருந்துள்ளனர். Read more

pothunalavayamபொதுநலவாய நாடாளுமன்ற ஒழுங்கமைப்பின் கனேடிய கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. கனடாவின் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, இலங்கையில் 3 தினங்கள் தங்கி இருந்து சந்திப்புகளை நடத்தவுள்ளது.

கனடாவின் உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர, வர்த்தக, சமுக தொடர்புகள் தொடர்பில் இந்த குழு கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

landதிருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதியில் உள்ள சிறிமாவோ பண்டார நாயக்காவினால் 1972 ஆண்டு விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட மூதூர் கல்மலையினை அண்டிய காணியை விட்டு வெளியேறுமாறு மூதூர் வனஜீவராசிகள் அதிகாரிகள் அச்சுறுத்துவதாக மூதூர் சந்தனவெட்டையில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இந்த சந்தனவெட்டைப் பகுதியில் தாங்கள் 1972 ஆண்டு காலப்பகுதியில் விவசாயம் செய்து குடியிருந்ததாகவும், யுத்தம் நிலவிய 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து மூதூர் நகர் பகுதிக்குச் சென்று வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர். Read more

manus island campஅவுஸ்திரேலியா தமது ஏதிலிக் கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு ஒருவருடம் காலக்கெடு விதித்தள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற ஏதிலிகள் கடல் கடந்த விசாரணைகள் என்ற கொள்கையின் கீழ், பப்புவா நியுகினிக்கு சொந்தமான தீவுகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர். Read more

paffrelஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டது. Read more

fishingவடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.