சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கொலை, போதை வர்ததகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக, நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் 50 பேரளவில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊரெழு KMI மற்றும் உரும்பிராய் லோகா அகடமி இணை நிறுவனங்களின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் (21.10.2018) பிற்பகல் 3.30மணியளவில் இணை நிறுவனங்களின் ஆசிரியர் மு.கயூரகன் தலைமையில் ஊரெழு KMI முன்றலில் நடைபெற்றது.
யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா இன்று (21.10.2018) பிற்பகல் 2.30மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.யனாத்தனன் தலைமையில் மூளாய் பிரசாத் அரங்கில் நடைபெற்றது.
யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் சங்கத்தின் தலைவர் திருமதி மைதிலி சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். கோண்டாவில் நாராயணா சனசமூக நிலையத்தினால் கிராமத்திலுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை மாலை சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தென்னிலங்கை இளைஞர், யுவதிகள் அநுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
யாழ். குப்பிழான் சிங்கப்பூர் திரு. கந்தையா கிருஸ்ணர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நிதிப் பங்களிப்பில் வருடாந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் 17.10.2018 புதன்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்றது.
யாழ். இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை 13.10.2018 சனிக்கிழமை இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில்; நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அவர்களின் தலைமையில் காலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.
யாழ். விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய கலையரங்க மண்டப திறப்பு விழாவும் பரிசில் நாள் நிகழ்வும் இன்று (18.10.2018) வியாழக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர் இரத்தினம் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.