Header image alt text

அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தனது யாழ். விஜயத்தின்போது சுன்னாகம் மத்திய சந்தையினை இன்று (10.10.2018) நேரில் பார்வையிட்டார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற முன்னாள் அதிபர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை ஆற்றவந்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் பேருரை நிகழ்த்தியபின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுன்னாகம் மத்திய சந்தைப் பகுதிக்கு சித்தார்த்தன் அவர்களுடன் சென்று மத்திய சந்தையின் நிலைமைகளைப் பார்வையிட்டார். Read more

யாழ். கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஸ்தாபகர் இந்துப்போட் அமரர் சு.இராசரத்தினம் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9மணியளவில் யா.கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் முதல்வர் காசிநாதர் குணசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் நிகழ்வில் இந்துப்போட் இராசரத்தினம் அவர்களின் உறவினரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் சுந்தரசிவம், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். Read more

வடக்கு மாகாண தேசிய ஓய்வூதியர் தின விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (08.10.2018) இடம்பெற்றது. யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

தொடர்ந்து நடனம் கவிதை, பேச்சு என பல்வேறு கலை நிகழ்வுகள், இடம்பெற்றன. இதன்போது வடமாகாணத்தில் ஓய்வூதியர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் சிறந்த செயற்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அரசாங்க அதிபர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Read more

இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீவிநாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தெ.திசாந் என்ற மாணவனுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையின் அனுசரணையில் நேற்று (08.10.2018) திங்கட்கிழமை துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.நல்லதம்பி, பாடசாலையின் அதிபர் சா.மதிசுதன் மண்முனை மேற்கு உபதவிசாளர் பொ.செல்லத்துரை (கேசவன்), மாநகர சபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), ஆசிரியரும் மாவட்ட குழு உறுப்பினருமான கமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். Read more

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 135ஆவது மாதிர கிராமான நாவலர் கோட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நேற்று (07.10.2018) காலை 8மணியளவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மூலிகைத் தோட்டமும், மாதிரிக் கிராமத்திற்காக கட்டப்பட்ட கிணறும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வின்போது வீடுகளுக்கான ஆவணப் பத்திரங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதோடு, தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள், உதவித் தொகைகள், உதவிப் பொருட்கள் என பல உதவிகள் அமைச்சரினால் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் என்.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், Read more

ஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் என்னும் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்; ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இன்றுமாலை 5.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவர்களான ஸ்கந்தவரோதயன்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், கணேசவேல், ஐயாத்துரை இராமசாமி, கந்தையா தனபாலசிங்கம், எஸ்.செல்லையா, தம்பிப்பிள்ளை தேவராஜன், திருமதி விஜயலட்சுமி லெட்சுமணன், வைத்தியக்கலாநிதி எஸ்.சிவானந்தராஜா ஆகியோரும், பழைய மாணவர் தாய்சங்க போசகர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். Read more

கோப்பாய் தொகுதிக்கான கிராமிய அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றுமாலை 4.30 மணியளவில் யாழ். ஊரெழு மேற்கு திலீபன் வீதியில் அமைந்துள்ள பாரதி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது.

வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி. அகீபன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர்கள் அ.பரஞ்சோதி, பா. கஜதீபன், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், வலிகிழக்கு பிரதேசசபைத் தலைவர் தி.நிரோஸ், பிரதேசசபை உறுப்பினர்கள் இரா.செல்வராஜா, சு.சிவபாலன், ச.ரேணுகா மற்றும், சி.முகுந்தன், கிசோர், ஊரெழு கணேசா வித்தியாசாலை அதிபர் அன்ரன் பிறேம்ராஜ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயத்தின் தேசிய வெற்றியார்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அருட்பணி யேசுரெட்ணம் அடிகளாரின் ஆசியுரையுடன் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்;கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி எஸ். சிறீஷகுமரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக இளவாலை கன்னியர் மடத்தின் குழுத் தலைவி அருட்சகோதரி குறூஸ், மாரிசன்கூடல் பங்குத்தந்தை அருட்பணி தினேஸ், ஒளியரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியை திருமதி சூரியகுமார், அருட்சகோதரிகள், பயிற்றுவிப்பாளர்களான ஜென்ஸ்டன், திருமதி ஜென்ஸ்டர், கஜன், அபி, கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது சம்பந்தமான கூட்டம் இன்றுமாலை 4மணியளவில் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் குமாரவேல் அவர்களின் தலைமையில் சுன்னாகம் தபாலகத்தில் இடம்பெற்றது.

இதில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். பிராந்திய அஞ்சல் அதிபர் திருமதி மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால் நிலைய தபாலதிபர் திருமதி ராஜராஜன், வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சன், சபா புஸ்பநாதன், பேரின்பநாயகம் உள்ளிட்ட சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், முன்னாள் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராஜா, யுகராஜ் மற்றும் தபால்நிலைய அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய உதயன் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கபிலன் மூலம் பிரேரிக்கப்பட்டு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி, வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் உள்வாங்கப்பட்டவையாகும். மேற்படி பத்திரிகைச் செய்தியினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றுகாலை வலிகிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கபிலனுடன் புத்தூர், அச்சுவேலி பகுதிகளுக்குச் சென்று குறித்த வீதிகளை நேரில் பார்வையிட்டார். Read more