பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி, யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். Read more
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக நாணய நிதியம் வழங்கவிருந்த ஆயிரத்து 500 மில்லியன் டொலர் நிதியின் ஐந்தாவது தவணை கைவிடப்பட்டது.
காணாமல் போனோருக்கு பதில் கூற வலியுறுத்தி காணாமல் போனோர்களின் உறவுகள் கறுப்பு துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா பத்து லட்சம் நிதியில் ஆவரங்கால் நடராஜஇராமலிங்க வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம்
யா/வதிரி திரு இருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இறுதி நிகழ்வுகள் 01-02-2019 அன்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திரு. இ.இராகவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக கரவெட்டி பங்குத்தந்தை அருட்பணி ப. அன்ரனிப்பிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராக பொறியியலாளர்(பழைய மாணவர்) ஜோன் ஜெயந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
துபாயில் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் உட்பட கைது செய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.