Posted by plotenewseditor on 21 January 2020
Posted in செய்திகள்
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில், இரண்டு 1ஆம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்தப் பல்கலைக்கழகக் கலைப்பீட 1ஆம் ஆண்டு மாணவர்கள், ‘வன்முறையற்ற மாணவர் அமைப்பு’ என, பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்தி வந்துள்ளனர். Read more