கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள 32 இலங்கையர்களே மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more
கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி-முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள இருமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டினுள் இருந்த 79 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன, அரசியலில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்திருந்த மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.