Header image alt text

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை, கருணைபுரத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64 வயது) என்பவரே இவ்வாறு குதித்து உயிரிழந்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர்களுக்கு விளக்கமறியல் இன்று நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறித்த விடயங்கள் வெளியாகின. இதன் காரணமாக இவர்களை அங்கொடையில் உள்ள ஐ.னு.ர்க்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். Read more

இன்று காலை 6 மணி முதல் பயணிகளைத் தவிர ஏனையவர்கள் யாரும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பயணிகளை தவிர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவரும் உட்செல்ல முடியாது. சீனாவில் இருந்து வரும் விமானங்களை வேறு ஒரு பகுதியில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சீன பிரஜைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடவடிக்கைளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நிலவும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் அவர்கள் இலங்கையை வந்தடைவார்கள் என பதில் தூதுவர் கே.கே யோகநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனாவில் கல்வி கற்ற 50 மாணவர்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். Read more

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி உறுதியளித்துள்ளார். Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ரமோன் அல்கராஸ் மற்றும் டவோ டெல்சூர் ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களின் கட்டளைத்த தளபதி உள்ளிட்ட குழுவினர், தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் அத் திணைக்களம் செயற்படவுள்ளது.