முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமது வாக்குகளை, தாம் தங்கியிருக்கும் இடங்களிலேயே அளிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த வாக்களிப்பு நிலையங்கள் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு அமைய அமைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இன்று வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எந்தவொரு நபருக்கும் இரு இடங்களில் வாக்களிக்க முடியாது. Read more
ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்து, 04 மணிநேரத்திற்குள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செம்பிய நாட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு இன்று இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொள்கிறார்.
துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற விரும்பவோர் தங்களது உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் அதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெயிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான தகனாமி கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது.
கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 2200 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
அனைத்து தேசிய பாடசாலைகளிலும் தவணைக் காலங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.