Header image alt text

மன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் திறந்துவைப்பு-தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மன்னார் வைத்தியசாலை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அந்தோனிப்பிள்ளை(கொன்சால்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு காரியாலயத்தினைத் திறந்துவைத்தார். நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வன்னி மாவட்ட வேட்பாளர்களான கந்தையா சிவலிங்கம்(இல-4), ஜி.ரி.லிங்கநாதன்(இல-5), கட்சியின் உபதலைவர் வி.ராகவன், கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் தேசிய அமைப்பாளர் க.தவராஜா, கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ், வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா மன்னார் மாவட்டங்களின் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Gepostet von People's Liberation Organisation of Tamil Eelam – PLOTE am Freitag, 10. Juli 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மன்னார் வைத்தியசாலை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அந்தோனிப்பிள்ளை(கொன்சால்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு காரியாலயத்தினைத் திறந்துவைத்தார். Read more

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 2,366 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more