Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2020) வியாழக்கிழமை மாலை 4.30அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது. Read more

31ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2020) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர். Read more

மக்களால் போற்றப்பட்ட புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தோழர் வசந்தன் (சரவணபவானந்தம் சண்முகநாதன்) அவர்களின் 22 வது நினைவஞ்சலி நிகழ்வு 15/07/2020 அன்று தோழர் படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில் தோழர்களால் நினைவுகூரப்பட்ட வேளையில். Read more