1. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணிநேரத்துக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

2. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல, மிகவும் யோசித்து எடுக்கப்பட்டதே என, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். Read more