2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை 6ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 7 மணி மற்றும் 8 மணிக்கு மாவட்ட ரீதியில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்று மற்றும் நாளை தபால் அலுவலங்களில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டச் செயலகத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை, வவுனியா மாவட்டச் செயலகம் அசௌகரியத்துக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்காளர்கள், புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியுமென, மன்னார் மாவட்டச் செயலாளரும் மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் இறுதி பெறுபேறு நாளை மறுதினம் (6) நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு பெறுபேறுகளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாளை பொதுத் தேர்தலை தொடர்ந்து எதிர்வரும் 20ம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
1. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,834ஆக அதிகரித்துள்ளது.