Header image alt text

நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவொன்றை அங்கொடை தேசிய தொற்றநோயியல் நிறுவனத்தில் ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் Covid–19 அவசர சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். Read more

சட்டவிரோதமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். Read more

வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறை ஒன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வலதுகுறைந்தோர் இரசியத் தன்மையை பேணி வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செஞ்சிலுவை சங்க வவுனியா கிளையின் முன்னாள் தலைவருமான சிவநாதன் கிசோர், அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்த செஞ்சிலுவை சங்கத் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அன்டன் புனிதநாயகம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராய்வதாக வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். Read more

செய்திகள்:-

Posted by plotenewseditor on 3 August 2020
Posted in செய்திகள் 

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு மீண்டும் யாழில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தேர்தல் கடமையில் ஈடுபடுங்கள் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாரின் தேர்தல் கடமை குறித்து விளக்கமளிக்க யாழ் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Read more