தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். அதன்படி, இன்று இந்தியா, தோஹா கட்டார் மற்றும் மாலைத்தீவில் இருந்து விமானங்கள் மூலம் இலங்கையர்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைத்தீவில் 187 பேரும் மற்றும் தோஹா கட்டாரிலிருந்து 17 இலங்கையர்களும் இவ்வாறு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.