வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் இருந்த சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மின் இணைப்பு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எடுக்கப்பட்ட விசாரணைகளையும் களவு போன பொருட்களின் விபரங்களையும் சபைக்கு அறிவிக்குமாறு தவிசாளர் கடந்த 3 மாதங்களாக கோரியிருந்தபோதும் செயலாளர் சபைக்கு விபரங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலையில் ‘களவாடப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமை மற்றும் பொருட்பட்டியல் சபைக்கு வெளிப்படுத்தாமை என்பதற்கு கண்டனம் தெரிவித்து தவிசாளரும் சபை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் வெளிப்படைதன்மையும் நேர்மைத்தன்மையும் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி காலவரையறை இன்றி சபைக்கூட்டம் தவிசாளரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அதாவது 06.06.2020 ஆம் திகதி சனிக்கிழமை பொருட்களுக்கு பொறுப்பானவர்கள் இல்லாத நிலையில் பிரதேச சபையின் பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி அன்றய தினம் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் இருந்த பதிவுகளும்; அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த கண்காணிப்பு கமராவானது சபைக் செயலாளர் கு.சற்குணராசாவின் பொறுப்பிலேயே இருந்துள்ளது என்பதுடன் அதற்கான இரகசியக் கடவுச்சொல்லும் (Pயளளறழசன) செயலாளரிடம் மட்டுமே இருந்துள்ளது.
இந்நிலையில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் தவிசாளர் அவர்கள் உடனடியாக சம்பவம் தொடர்பான அறிக்கை மற்றும் காணாமல் போன பொருட்களின் விபரம், மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் அறிக்கை, கண்காணிப்பு கமராவில் பதிவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை என்பவற்றை தொடர் நடவடிக்கைக்காக உடன் சமர்ப்பிக்குமாறு செயலாளரிடம் கோரப்பட்டதாகவும் அவர் அவசரதன்மையினை கருத்திற்கொண்டு விரைந்து செயற்படாமையினால் இவ்விடயம் தொடர்பில் உள்ளுராட்சி உதவி ஆணையாளரிற்கும், உள்ளுராட்சி ஆணையாளரிற்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தருக்கும் உடன் தெரியப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக முழுமையான ஆவணக்கோப்பொன்றினை கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் அனுப்பிவைத்து இது தொடர்பில் விரைவாக விசாரணைக் குழு அமைத்து தவறான செயற்பாடுகளை சீர்செய்ய ஆவனசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் இந் நிகழ்வின் பின்னர் 3ஆவது சபைக்கூட்டமான 21.08.2020 ஆம் திகதிய சபைக்கூட்டத்திலும் சபைச் செயலாளர் அவர்கள் இது தொடர்பில் எந்த தெளிவுபடுத்தல்களையும் முன்வைக்கவில்லை, களவுபோன பொருட்களின் விபரம் வெளிப்படுத்தப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் சபை ஆரம்பித்து சிறிது நேரத்தில் கௌரவ உறுப்பினர்களால் தொடர்ச்சியாக பல கேள்விகள் முன்வைக்கப்பட்டபோதும் சபைச் செயலாளரிடமிருந்து உரிய ஆவணங்களோ பதிலோ கிடைக்கப்பெறாமையால் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர். 75 நாட்களாக தவிசாளரால் இவ்விபரங்கள் கோரப்பட்டுள்ளபோதும் பொறுப்பற்ற நிலையில் செயலாளரும் நிர்வாகத்தினரும் செயற்படுவதாக தவிசாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்மையினை தொடர்ந்து காலவரையறை இன்றி சபை ஒத்திவைக்கப்பட்டு கௌரவ தவிசாளரும் உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
நாங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள், அதிலும் ஒற்றுமையாய் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மற்றைய சபைகளுக்கு ஓர் முன்மாதிரியான சபை. இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளப்படவேண்டும் என்ற நோக்கில் இதுதொடர்பாக பொலிசில் முறைப்பாடும் செய்துள்ளோம் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சபைச் செயலாளர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் விசாரணைகள் நடைபெறுவதாலேயே அவணங்கள் வழங்கப்படவில்லை. விசாரணையின் முடிவினைபொறுத்தே கருத்துக்கள் வெளியிடமுடியும் என தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் இதுவரை ஆரம்;பிக்கப்படவில்லை. அதற்கான குழு நியமிக்கப்பட்டு அக்குழு இவ் விசாரணையினை நடைமுறைப்படுத்தும். இதற்கான தீர்வு தரும் என சபையினரிற்கோ தவிசாளரிற்கோ செயலாளராலோ நிர்வாகத்தினராலோ இதுவரை எதுவித அறிவித்தலும் கிடைக்காத நிலையில் செயலாளரின் இவ்வாறான பதில் எவ்வளவு தூரம் உண்மையானது? ஓரு கௌரவ சபைக்கோ, தவிசாளரிற்கோ தெரியப்படுத்தாது அச் சபையில் விசாரணையினை நடாத்தமுடியுமா? நடாத்துவது என்பது சட்டத்திற்கும் நிர்வாகத்திற்கு சரியானதா? …. ஏன் தொடர்ச்சியாக இவ்வாறான மழுப்பல்களும் பொய்யான செயற்பாடுகளும் என உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
https://www.facebook.com/179563696026934/posts/639789346671031/?sfnsn=mo&extid=9gIaeeonBUbOymYX&d=n&vh=e