கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 296 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கட்டாரிலிருந்து 21 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அனைவருக்கும் பீ.ஆர்.சி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.