கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரால் ஜீ.ஏ.சந்திரசிறியினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறித்த பார்வைக்கூடத்திற்குள் செல்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு கட்டணம் அறிவிடப்பட மாட்டாது என்பதுடன், ஏனையவர்களுக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.