வருடத்தின் கடந்த 5 மாதங்களில் வறட்சியினால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 69,571 குடும்பங்களைச் சேர்ந்த 2 ,32,423 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.குறித்த காலப்பகுதிகளில்10 மாவட்டங்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல்,

பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டமே அதிகமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 27,681 குடும்பங்களைச் சேர்ந்த 89,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.