Header image alt text

கொழும்பு கிழக்கு முனைய செயல்பாடுகளை வெளிநாட்டிற்கு ஒப்படைக்கக் கூடாது என்று கோரி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த பணி புறக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. Read more

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (28-வயது) என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

இதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்கு உரித்தான தபால் நிலையங்களுக்கு சென்று ஓகஸ்ட் 4 மற்றும் வாக்களிப்பு தினமான ஓகஸ்ட் 5 ஆகிய இரு தினங்களிலும் வாக்குச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பு துறைமுகத்தின் பிரதான வீதியை தடுக்காமலும் அருகிலுள்ள அரச நிறுவனங்களுக்குள் உள்நுழையாமலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு அமைய தற்போது குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்திகள்:-

Posted by plotenewseditor on 1 August 2020
Posted in செய்திகள் 

1. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. அதற்கமைய, பிரசார கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று பிரசாரங்களில் ஈடுபடல், துண்டுபிரசுரங்களை விநியோகித்தல், தேர்தல் பதாகைளை உப அலுவலகங்களில் காட்சிப்படுத்தல், சுவரொட்டி, விளம்பரம், பதாகைளை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2. இம்முறை பொதுத்தேர்தலில் புள்ளடியிடுவதற்கு தேவையேற்படின் பேனாவைக் கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீலம் அல்லது கறுப்பு நிற குமிழ்முனைப் பேனாவை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Read more