குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் தலைமையகம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று (19) திறக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை அடுத்து, அண்மையில் தற்காலிகமாக குறித்த அலுவலகம் மூடப்பட்டது.

இந்த நிலையில், முற்கூட்டியே தொலைபேசி அழைப்பு மூலம் நேரமொன்றை ஒதுக்கி அங்கு வருமாறு அறிக்கையொன்றை வெளியிட்டு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.