Header image alt text

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து, பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது. Read more

MT NEW DIAMOND கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பணம் மற்றும் நட்டஈடு வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கப்பலை அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கப்பலை இந்நாட்டு கடற்பரப்பில் இருந்து இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்திருந்தாகவும் ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அதற்கொரு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். Read more

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானமையால், 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 7 மணியளவில், டயகம- ஹட்டன் பிரதான வீதியில் பணித்துக்கொண்டிருந்த பஸ், போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் வைத்தே, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்றுகாலை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகளின் நினைவு தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மதத் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், Read more

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். Read more

கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மன்னார் கொக்குப்படையான் மீனவக் கிராம மக்கள் கொக்குப் படையான் கடற்கரைப் பகுதியில் போராட்டமொன்றை நேற்று முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், ‘மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொக்குப் படையான் மீனவ கிராமங்கள் வேகமாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் அப்பகுதி கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது. Read more

ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more