நாட்டில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 43 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் ஏனைய 04 பேர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2122ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5585ஆக அதிகரித்துள்ளது.