முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில்பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பு வைத்தவர்களில் 145 பேர் கடந்த 23.10.2020 அன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்தன. அதில், 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.