பொலிஸாரில் 78 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.பொலிஸ் உணவகத்துக்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை கொண்டு வர சென்றவர்களின் ஊடாகவே இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.