தெஹிவளை  மற்றும் இரத்மலான பகுதிகளில் 160 கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர் என தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும்  இரத்மலானையில் 70 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட   2139 பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து 160 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.