Header image alt text

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு புது நியமனம் ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள  பிரதமரின் அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது. Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்களை சுகாதார அமைச்சின் ​தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு வெளியிட்டுள்ளது. Read more

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. Read more

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more

எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான பதிவுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். Read more

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு நேற்றைய தினம் 50 ற்கும் மேட்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர். Read more

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கான உத்தியோக விடுதி, வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இக்கட்டடத்தை, சட்டமா அதிபர் தபேர டி லிபேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்தக் கட்டடம், தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு, இராணுவத்தினரின் நிர்மாணிப்பு பணியில் கட்டப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், சட்டமா அதிபர் திணைக்கள நிர்வாக பிரிவு அதிகாரி உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதிபதிகள், வவுனியா அரசாங்க அதிபர், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.