மத்திய மாகாணத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1190ஆக அதிகரித்துள்ளது.

இன்றுக் காலை வரையில் மத்திய மாகாணத்தில் புதிய 47 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் 37, நுவரெலியாவில் 4, மாத்தளையில் 6 தொற்றாளர்களும் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் கண்டியிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கண்டியில் இதுவரையில் 765 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.