அண்மையில் அமரத்துவமடைந்த தோழர் உலகன் (வடிவேல் அன்பழகன்- மட்டக்களப்பு) அவர்கள் தனது குடும்பத்திற்கு அரச வீட்டுத்திட்டம் ஊடாக கிடைக்கப்பெற்ற வீட்டினை முழுமையாக்குவதற்காக கழகத்திடம் நிதியுதவி கோரியிருந்தார்.
அது தொடர்பில் நாம் கழகத்தின் சுவிஸ் கிளை தோழர்களிடம் விடுத்த வேண்டுகோளையேற்று சுவிஸ் கிளை தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பணமான ரூபாய் 63,000/= (அறுபத்து மூவாயிரம்) கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான தோழர் கேசவன் ஊடாக 18.12.2020 வெள்ளிக்கிழமை அமரர் தோழர் உலகன் அவர்களின் துணைவியாரான சாந்தகுமாரி அன்பழகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
