Header image alt text

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்று(17) முதற்தடவையாக கூடவுள்ளனர். அடுத்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்பு தயாரித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 616 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணபட்டுள்ளனர். மேற்படி தொள்ளாளர்களிடையே கொழும்பு, களுத்துறை, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அனேகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதராக நியமிக்கப்பட்ட  பாலித கோஹன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த 15ஆம் திகதி சீனாவை சென்றடைந்த அவர் நேற்று(16) கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவரை, பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் முகவரி, அடையாள அட்டை எண் உட்பட பெயர் விவரங்களை, பஸ் நடத்துநர்கள் புத்தகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஒரு பஸ்ஸில் பயணித்த பயணியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் பயணித்த மற்யை பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த இது உதவியாக இருக்கும் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read more

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.l

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்  தொற்று உள்ளாகி மரணமடைந்தோர் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது. இன்றையதின அறிவிப்பின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மூவர் மரணமடைந்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால், நேற்று (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Read more

கல்கிசை ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சீன மொழியிலான அறிவிப்பு பலகையை, ரயில்வே திணைக்களம் அகற்றியுள்ளது.

எதிர்காலத்தில், எந்தவொரு ரயில்வே நிலையத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் அனுமதி வேண்டும் என்று, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

Read more

சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் போது, நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்,

Read more