புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வாழ்விடமாகவும் கொண்டவரும், தேனீ இணையதள ஆசிரியருமான ஜெமினி என்றழைக்கப்படும் திரு. கணேஷ் கங்காதரன் அவர்கள் இன்று (22.01.2021) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம். Read more
சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கொவிட்19 தடுப்பூசி இந்தியாவிலிருந்து எப்போது கிடைக்கும் எனும் விவாத நிலைக்கு மத்தியில், மீனவர்களின் பிரச்சினை எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.
யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வௌியேறி, வௌி மாவட்டங்களில் வசிப்பவர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இந்த வருடம் செல்லும் முதலாவது குழு தென் கொரியாவுக்கு புறப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக தமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 91 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8173 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது மற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் வரவிருக்கும் திருத்தங்கள் குறித்து, அந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ‘பெப்ரல்’எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.