20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த தோழர்கள் கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா, வசந்த், மாதவன்(ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன்),
சாமி, சைமன், பிரபு, மரியான், பாபு, ரவீந்திரன், நந்தீஸ், சிறில், சுதன், சுகுணன், யூலி, பி.எல்.ஓ, செல்வன், பேனாட், சீலன், சசி, அத்தான், தேவன், த.ரமேஷ், கலன், மார்க்ஸ், வி.வரதன், லிங்கம், வே.சுரேஸ்,
குகன், சாந்தன், ரகு, கோம்ஸ், மதன், பார்த்தீபன், சித்திரா, விக்ரம் ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. நேற்றைய தினம் (18) 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக, விமானப்பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றையதினம் மட்டும் 3,051 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை முற்றாகவும் பொதுச்சந்தை பகுதியளவிலும் முடக்கப்பட்டுள்ளது.
2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் நினைவுச் சுடரேற்றி அஞ்சலியுடன் நினைவுகூரப்பட்டது.