கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் தனது ஒரு ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, Read more
இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டாக்டர் அன்வர் ஹம்தானி,
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் இவர் செயற்பட்டிருந்தார். அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் நாளை (11) முதல் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பிசிஆர் பரிசோதனை மாதிரிகள் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிற்கு அனுப்பப்பட்டே, அதற்குரிய முடிவுகள் பெறப்பட்டு வந்தன.
ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள், நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம், இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி முன்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸினால் இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் நடைபெறுமானால் சிறந்ததென்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறையின் திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.